Blog

சாபக்கேடு

அவனோ தோளில் ஒரு குழந்தையும், தலையில் பல சுமையையும் சுமந்து நடக்கிறான்…

அவளோ தோளில் ஒன்றும் வயிற்றில் ஒன்றும் சுமந்து நடக்கிறாள்..

இவர்கள் ஒன்றும் யாத்திரிகர்கள் இல்லை.. நாட்டின் குடிமக்கள்…

வேலை தேடி வந்தது ஓர் ஊருக்கு .. ஆனால் இன்றோ வாழ வழி இன்றி சுமைகளை சுமந்து,

இரத்தம் ஒழுக கால்கள் செல்கின்றது சொந்த ஊருக்கு…

தன் எடை கொண்ட சுமையை தலையில் சுமந்து செல்லும் பச்சிளங்குழந்தை…

ஓரிரு மயில்கள் அன்றி.. ஆயிரம் மயில்கள் கடந்த செல்லும் பயணம் இது…

நடு ரோட்டில் பிரசவிக்கிறாள் வயிற்றில் சுமந்தவளும்…

கண்ணில் விழுந்த தூசி இல்லை தேய்த்து எடுக்க… இரத்தம் ஒழுக பெற்று எடுத்தாள்…

மீண்டும் தொடர்கிறாள் பயணத்தை..

சொல்லும் தடுமாறும்.. நாவும் தழுதழுக்கும்… கண்ணீரும் ஆறாய் பெறுக்கெடுக்கும்..

பார்த்து விட்டு கடந்து சென்ற சிலர்… பரிதவித்து உச்சு கொட்டிய சிலர்… இன்னும் பேசுபொருளாக அரசியல் செய்த சிலர்..

உதவி செய்ய போராடும் சிலர்…

ஆனால் எதுவுமே நடக்காதது போல் இருக்கும் பல தலைமைகள்..

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு தடுமாறும் அவலம் இது..

மக்களின் தலை விதி என்பதா?

இல்லை நாட்டின் சாபக்கேடு என்பதா??

வெட்டுக் கிளிகள்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு:-

கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது.

வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை

இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.

பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தும் படிநிலை

இந்த செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலங்களில் பெரும் மாறுதல் ஏற்படுத்துகிறது. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் ஓத்துழைத்து வாழும் கூட்டு வாழ்வுக்குத் (Gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும் ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் முட்டைகள் பொரித்தபின் அவற்றின் வளரிளம் பருவத்தில் (Nymph) நடைபெறுகின்றது. பெற்றோரிடமிருந்து முற்றிலும் தோற்றத்திலும் நடத்தையிலும் வேறுபட்ட இந்தத் தலைமுறை பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் தகவமைப்பைப் பெறுவதோடு பெரும் அழிவு சக்தியாக உருவெடுக்கின்றது.

பலநூறு முட்டைகளையிடும் ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்நாளில் மூன்று முறைகள் வரை முட்டையிடுகிறது. இவை இலைகளில் மட்டுமின்றி மண்ணிற்கு அடியிலும் முட்டையிடுகின்றன. பெரும் கூட்டமாக மிகக்குறைந்த கால அவகாசத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி பெரும்பசியுடன் கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன. இவற்றின் கண்ணில்படும் எந்தத் தாவரமும் தப்ப முடியாது. இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. தொடர்ந்து பசுமையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும் இவை செங்கடலையே தரையிறங்காது தாண்டக்கூடியவை. சில ஆண்டுகள்கூட தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டே தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கும் திறன் கொண்டவை. பாலைவன லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளி இரண்டரை மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள்வரை வாழக்கூடியது.

ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.

உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன்பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.

இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?

அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்படவேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்கமுடியாது உண்மை.

இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்துவிட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கவேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.

கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது.

தொடரும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றமும்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக்கிடக்கின்றன. அக்காலத்திலேயே வெட்டுக்கிளிகள் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே இருந்திருக்கின்றன. எனினும் இன்றைய அதிகரிக்கும் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் இந்த அழிவு சக்திக்கு இன்னும் அதிக சாதகமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆபத்தற்ற solitary phase இல் வாழும் வெட்டுக்கிளிகளை ஆபத்தான Gregarious phase க்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் காலநிலையுமே. அதிகரிக்கும் கடல்களின் வெப்பநிலை அதிக ஈரப்பதத்தையும் அபூர்வமான புயல்களையும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் ஏற்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளின் Gregarious phase க்கு மேலும் மேலும் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

கொரோனா உட்பட உலகெங்கும் நடக்கும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான். காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள்.

வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி, என புதிய புதிய மொழியில் இந்த பூமி மனிதனிடம் ஏதேதோ பேச முயல்கிறது. ஆனால் இதை போன்ற கடுமையான சோதனைகளை உலகம் இதற்கு முன்பே சந்தித்து இருக்கின்றது.

சரி அதற்கான ஆதாரங்களை மதங்களை கடந்து பார்ப்போம்.

படையெடுக்கும் வெட்டுக்கிளியால்
பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் கடுமையான பாதிப்புகள்..
உ.பி வரை வந்துவிட்டது என்று செய்திகள் சொல்கிறது.

வெட்டுக்கிளி படையெடுப்பும் இறை வேதமும் …

அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகின்றான்…

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் – ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
(அல்குர்ஆன் : 7:133)

வெட்டுக்கிளியின் அசுர வேகத்தில் பல ஏக்கர் விவசாயத்தை அழித்துவிடுமாம்.

குறிப்பாக அமெரிக்கா நாடுகளில் காணப்படும் சில வகை வெட்டுக்கிளி இனங்கள், தொடர்ந்து 13 வருடங்கள் மண்ணில் புதையுண்டு மரண நிலையில் வாழ்ந்து வரும். இதில் வேறு ஒரு இன வெட்டுக்கிளிகள். 17 வருடங்கள் மண்ணுக்குள்ளேயே முட்டையுடன் அடங்கிக் கிடக்கும். சரியாக 13 வருடங்கள் முடிந்து பதினாலாம் வருடத்தில்…அல்லது 17 வருடம் முடிந்து பதினெட்டாவது வருடத்தில்தான் மண்ணுக்கு மேல் வெளி வந்து பறந்து திரியும். இந்த வெட்டுக்கிளி இனத்திற்குப் பெயர். ( Periodical cicadas.Magiccicada is the genus of the 13 years and 17 year )

பதினேழு வருடங்கள் மண்ணுக்குள் மரண நிலையில் இருந்த இந்தவெட்டுக்கிளிகள் கடைசியாக 2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தென்பட்டது. இனி அதன் மரண மயக்கம் தெளிந்து விழித்து எழுவது 2024 ஆம் வருடமே! அல்லாஹ்வின் படைப்பில் பல ஆச்சரியங்கள் உண்டு.இறந்த மனிதன் இறுதி நாளில் மீண்டும் உயிர் பெற்றெழுவது இறை மறுப்பாளர்களுக்கு நம்ப முடியாத செய்தியாக உள்ளது. ஆனால் ஒரு சிறிய வெட்டுக்கிளி முட்டையானது பதினேழு வருடம் பூமியில் புதையுண்டு மரண நிலையில் இருந்து பதினெட்டாம் வருடம் சிறகுகள் முளைத்து மண்ணுக்கு மேல் உயிருடன் பறந்து வருவது இன்றும் நம் கண்முன்னே நடக்கும் காட்சியாக உள்ளது.

பனிரென்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் போல் 17 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே மண்ணறையிலிருந்து மேல் வரும் வெட்டுக்கிளிகள் உள்ளன. இவைகளின் உலக வாழ்வு ஐந்து வாரங்கள் மட்டுமே! அதற்குள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட்டு அதை மண்ணறையில் வைத்து தன் வாழ்வை முடித்து விடும். இந்த முட்டைகள் மீண்டும் வெட்டுக்கிளிகளாக வெளியுலகம் வருவதற்கு அடுத்த 13 அல்லது 17 வருடங்கள் மண்ணறை கப்ர்ஸ்தானிலேயே உறங்க வேண்டும். மரித்த மனிதர்கள் புதை குழியிலிருந்து வருவதற்கு உதாரணமாக அல்லாஹ் வெட்டுக்கிளியை உதாரணம் காட்டியதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம்.அல்லாஹ்வே அறிந்தவன்.

خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ‏
(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள்புதைகுழிகளிலிருந்துபரவிச்செல்லும்வெட்டுக்கிளிகளைப்போல்_வெளியேறுவார்கள்.
(அல்குர்ஆன் : 54:7)

“(எந்த உலக வாழ்க்கையின் போதையில் மயங்கி நம் சான்றுகள் குறித்து நீங்கள் அலட்சியமாக இருக்கின்றீர்களோ அந்த) உலக வாழ்க்கையின் உதாரணம் இதைப் போன்றதாகும்: நாம் வானத்திலிருந்து மழையை இறக்கினோம்; பின்னர் அதன் மூலம் மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக்கூடிய பூமியின் விளைபொருள்கள் நன்கு அடர்த்தியாக வளர்ந்தன; பூமி அழகாகவும், செழுமையாகவும் காட்சியளிக்க, அதன் பலனை அடைந்திட தாங்கள் ஆற்றல் பெற்றுள்ளோம் என அதன் உரிமையாளர்கள் எண்ணிக் கொண்டிருந்த அதே நேரத்தில் திடீரென இரவிலோ, பகலிலோ நம்முடைய கட்டளை வந்துவிட்டது! மேலும், நேற்று வரை எதுவும் அங்கு விளைந்திருக்காதது போல அதனை முற்றாக நாம் அழித்து விட்டோம்; சிந்தித்துணரும் மக்களுக்கு இவ்வாறு சான்றுகளை மிகத் தெளிவாக நாம் விளக்குகின்றோம்.
(அல்குர்ஆன் : 10:24)

நம் அனைவரையும் இறைவன் பாதுகாப்பானாக…

மனிதர்கள் இறைவனை மறந்து அநியாங்களை அதிகம் செய்யும் போது, இறைவன் எச்சரிக்கிறான். மனித சக்திக்கு மிஞ்சிய பலவற்றை செய்து காட்டி உணர்த்துகிறான். மனிதன் அதைக்கொண்டே உணர்ந்து தன்னை திருத்திக் கொண்டால் சரி. இல்லையேல் இறுதியில் ஒரே ஒரு பிடிதான். மனிதன் அழிக்கப்பட்டுவிடுவான்.
அப்படிப்பட்ட எச்சரிக்கைகள்தான் இவைகள்.
முதலில் கொரோனா.
அடுத்து புயல்மழை. பங்களாதேஷ் தவித்துக் கொண்டிருக்கிறது.
அடுத்து வெட்டுக்கிளி. இதோ பல நாடுகளை புரட்டிப்போட்டு வருகிறது.
இதிலும் திருந்தாவிட்டால் அடுத்த எச்சரிக்கைகள் தயாராக உள்ளன.
فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَـرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيٰتٍ مُّفَصَّلٰتٍ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ‏
இறுதியில் நாம் அவர்கள் மீது புயல் மழையை அனுப்பினோம்; மேலும், வெட்டுக்கிளியை ஏவினோம்; பேன்களைப் பரப்பினோம்; தவளைகளைப் பெருகச் செய்தோம்; இரத்தத்தைப் பொழியச் செய்தோம். இந்தச் சான்றுகள் அனைத்தையும் தனித்தனியே காண்பித்தோம். ஆயினும், அவர்கள் ஆணவம் கொண்டு நடந்தனர்; கொடூர குற்றவாளிகளாகவும் இருந்தனர்.
(அல்குர்ஆன் : 7:133)

விநோதமான வெட்டுக்கிளி

வெட்டுக்கிளி வலிமை மிக்க ஏழுவகைப் பிராணிகளின் உருவ அமைப்பில் உள்ளது.

  1. அதன் தலை குதிரையின் தலையாகும்.
  2. அதன் கழுத்து காளையின் கழுத்தாகும்.
  3. அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும்.
  4. அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும்.
  5. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்களாகும்.
  6. அதன் வால் பாம்பின் வாலாகும்.
  7. அதன் வயிறு தேளின் வயிராகும். (நூல்: தஹ்தீபுல் கமால்)

உலகில் பலநாடுகளில் விவசாயிகளிடம் வெட்டுக்கிளி என்று சொன்னால் ஒரே பயம்தான். ஒன்றல்ல, இரண்டல்ல, கோடிக்கணக்கில் வெட்டுக்கிளிகள் கூட்டாகப் படையெடுத்து வந்து பயிர்களை மட்டுமின்றிச் செடி, கொடி, மரம் என அனைத்தையும் தின்று தீர்த்து அப்படி ஒரு பொருள் இருந்ததற்குரிய அடையாளமே தெரியாமல் செய்துவிடும்.

வெட்டுக்கிளி படையெடுப்பு என்பது மிகவும் பயங்கரமானது. வட ஆப்பிரிக்காவின் மேற்குக் கோடியில் பாலைவனப் பகுதிகளில் தொடங்கி சீனாவின் வடபகுதி வரை பல நாடுகள் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் பாதிக்கக் கூடியவை. இந்த பட்டியலில் இந்தியாவின் ராஜஸ்தான், குஜராத், பஞாப், ஹரியானா ஆகிய மாநிலங்களும் அடங்கும்.

குர்ஆனில் வெட்டுக்கிளி

குர்ஆனில் “அல்ஜராது” என்று வெட்டுக்கிளியை அழைக்கப்படுகிறது. முஜாஹித் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது; “ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய சமூகத்தாருக்கும் சோதனையாக அனுப்பப்பட்ட வெட்டுக்கிளிகள் அவர்களது வீட்டுக்கதவுகளில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகள் மற்றும் இரும்பாலான பொருட்களை சாப்பிட்டு விட்டு மரப்பலகைகளை விட்டுவிடும். (நூல்: தஃப்ஸீர் தபரி)

பொதுவாக வெட்டுக்கிளிகள் மரப்பலகைகளைப் போன்ற மிருதுவான பொருட்களைத்தான் தின்று தீர்க்கும். இது என்னவோ மிருதுவான பொருட்களை விட்டுவிட்டு கடினமான இரும்பை தின்று தீர்த்தது என்றால் இந்த வெட்டுக்கிளிகள் இறைவன் புறத்திலிருந்து வந்த சோதனையான வெட்டுக்கிளியாக இருப்பதால், இதே மாதிரி விநோத செயல்பாடுகளில் இறங்கியுள்ளது.

கிறிஸ்தவ விவிலியம் பழைய ஏற்பாட்டில் வெட்டுக்கிளி

பாலைவன வெட்டுக்கிளிகள் இது மாதிரி இருக்காது. ஆனால் ஃபிர்அவ்னின் சோதனைக்கு வந்த வெட்டுக்கிளிகள் பற்றி கிறிஸ்தவ விவிலியம் பழைய ஏற்பாட்டில் காணப்படுவதாவது, வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லை முழுவதும் இறங்கிற்று. அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் இதற்கு முன் இருந்ததும் இல்லை, அதற்குப் பின் இருந்ததும் இல்லை. அவை பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று. தேசம் அவற்றால் அந்தாகரப்பட்டது. கல்மழைக்கு தப்பி இருந்த நிலத்தின் பயிர் வகைகள் யாவும் மரங்களின் கனிகள் யாவையும் அவை பரீட்சித்துப்போட்டது. எகிப்து தேசமெங்குமுள்ள மரங்களிலும், வயல்வெளியான பயிர் வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாய் இருக்கவில்லை. (யாத்திராகமம் 10,14,15)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”வெட்டுக்கிளிகள் ஒரு தனிப்பட்ட உயிரினம் அல்ல; மாறாக அவை கடலில் உள்ள மீன் ஒன்றின் தும்மல் மூலம் உருவானவை” என்றார்கள்.

ஒரு மீன் தும்மல் போட்டு வெட்டுக்கிளியை வெளிப்படுத்தியதை நேரில் கண்ட ஒருவர் தமக்கு இந்த ஹதீஸை அறிவித்ததாக அறிவிப்பாளர் ஸியாத் பின் அப்தில்லாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்கள்.

இதை ஆய்வு செய்த ஒருவர் கூறியதாவது; ”கடலிலுள்ள மீன் இனங்களில் ஒன்று கடலோரத்தில் வந்து முட்டையிடும். பின்னர் அங்குள்ள தண்ணீர் வற்றிக் காய்ந்ததும், அந்த முட்டையில் சூரிய ஒளி படும். அந்த முட்டைகள் வெடித்து அவற்றிலிருந்து சிறகடிக்கும் வெட்டுக்கிளிக் குஞ்சுகள் வெளிவரும். (நூல்: திர்மிதி, இப்னுமாஜா)

வெட்டுக்கிளியை நாம் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது!

நபித்தோழர் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது; “நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஏழு போர்களில் கலந்து கொண்டோம். அப்போது நாங்கள் வெட்டுக்கிளிகளை உண்டோம். (நூல்: புகாரி, முஸ்லிம்)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; “தானாக செத்தவற்றில் இரண்டும், இரத்தங்களில் இரண்டும் நமக்கு உண்ண அனுமதிக்கப்பட்டுள்ளது. செத்தவற்றில் மீனும், வெட்டுக்கிளியும், இரத்தங்களில் கல்லீரலும், மண்ணீரலும் ஆகும். (அறிவிப்பாளர்: ஜாபி பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ, அபூதாவூத், தாரமி)

வெட்டுக்கிளிகளால் கிராமப்புறங்கள் மட்டுமே பாதிக்கப்படும் என்பதில்லை. ஒரு சமயம் சீனாவின் வட பகுதியில் ஹோ ஹாட் நகரை வெட்டுக்கிளிக் கூட்டம் தாக்கியது. சாலையில் சென்றவர்களின் முகத்தை வெட்டுக்கிளிகள் அப்பிக்கொண்டன். கார்கள் மீது வெட்டுக்கிளிகள் படை படையாக மோதின. பின்னர் இவற்றை லாரி லாரியாக அகற்ற வேண்டியிருந்தது.

இந்தியாவில் 1978 ஆன் ஆண்டிலும் பின்னர் 1993 ஆம் ஆண்டிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு நிகழ்ந்தது.

வெட்டுக்கிளிகளின் தாக்குதல் கடுமையாக இருக்கும்போது ஒரு சதுர மீட்டரில் 10,000 வெட்டுக்கிளிகள் வரை இருக்கும். சில சமயங்களில் இது பல நூறு சதுர மீட்டராகவும் இருக்கலாம். இந்த மாதிரியான வெட்டுக்கிளி கூட்டத்தில் 4 கோடி முதல் 8 கோடி வெட்டுக்கிளிகள் வரை இருக்கும். இவைகள் படையெடுத்து வரும்போது மிகப்பெரும் மேகக்கூட்டங்கள் நகர்ந்து பூமிக்கு வருவதுபோல் இருக்கும்.

ஃபிர்அவ்னுக்கு இறை சோதனையாக….

இதைவிட மிகப்பெரிய வெட்டுக்கிளி படையை ஃபிர் அவ்ன் தேசத்து எகிப்து மீது இறை சோதனையாக அனுப்பி வைத்ததாக அல்-குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

“அவர்கள் மூஸாவை நோக்கி, “நீங்கள் எங்களை வசப்படுத்துவதற்காக, எவ்வளவோ (அற்புதமான) சூனியத்தை நீங்கள் எங்கள் முன் செய்த போதிலும் நாங்கள் உங்களை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறிவிட்டார்கள். ஆகவே அவர்கள் மீது (மழையுடன் கூடிய) புயல் காற்று, வெட்டுக்கிளி, பேன், தவளை, இரத்தம் ஆகிய தெளிவான இவ்வத்தாட்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக நாம் அனுப்பி வைத்தோம். இதன் பின்னரும் அவர்கள் கர்வம் கொண்டு குற்றம் செய்யும் மக்களாகவே இருந்தார்கள். (அல்-குர்ஆன் 7:132,133)

வெட்டுக்கிளியை நீங்கள் கொன்றுவிடாதீர்கள், அது மிகப்பெரியவனான அல்லாஹ்வின் படை என்று ஒரு ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளது. அவைகள் விவசாயப்பயிர்களுக்கு தீங்கு செய்யாமல் இருந்தாலதான் அவற்றை கொல்லக்கூடாது. அவைகளால் தீங்கு ஏற்படும் பட்சத்தில் கொல்ல அல்லது அப்புறப்படுத்துதல் செய்யலாம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னிலையில் ஒரு வெட்டுக்கிளி வந்தது. அதனைப்பிடித்துப் பார்த்ததில் அதன் இறக்கைகளின் மீது அப்ரானி மொழியில், “நாங்கள் மிகப்பெரியவனான அல்லாஹ்வின் படை, எங்களுக்கு 99 முட்டைகள் இருக்கின்றன. எங்களுக்கு 100 முட்டைகள் பூர்த்தி அடைந்தால் நாங்கள் உலகையும் அதிலுள்ளதையும் தின்று தீர்த்துவிடுவோம்” என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அல்லாஹ்வே வெட்டுக்கிளியை அழிப்பாயாக, அவற்றில் பெரியவைகளைக் கொன்று சிறியவைகளை மரணிக்கச் செய்வாயாக! அவற்றின் முட்டைகளை வீணாக்கி, அவற்றின் வாய்களை முஸ்லிம்களின் பயிர்களை விட்டுத் தடுப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையை கேட்பவனாக இருக்கிறாய்” என்று பிரார்த்தித்தார்கள். பிறகு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்து, “அந்தப் பிராத்தனையில் சில உமக்கு அங்கீகரிக்கப்பட்டது” என்று கூறினார்கள். (நூல்: தஃப்ஸீர் ஹமீத்)

ஷஅபீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது; ஒருமுறை நீதிபதி ஷுரஹ் பின் அல்ஹாரிஸ் அவர்களிடம் வெட்டுக்கிளிகளின் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள்,

“அல்லாஹ் வெட்டுக்கிளிகளை இழிவாக்குவானக! அதில் வலிமை மிக்க ஏழுவகைப் பிராணிகளின் உருவ அமைப்பு உள்ளது.

  1. அதன் தலை குதிரையின் தலையாகும்.
  2. அதன் கழுத்து காளையின் கழுத்தாகும்.
  3. அதன் மார்பு சிங்கத்தின் மார்பாகும்.
  4. அதன் இறக்கை கழுகின் இறக்கையாகும்.
  5. அதன் கால்கள் ஒட்டகத்தின் கால்களாகும்.
  6. அதன் வால் பாம்பின் வாலாகும்.
  7. அதன் வயிறு தேளின் வயிராகும்” என்றார்கள். (நூல்: தஹ்தீபுல் கமால்)

நீங்கள் வெட்டுக்கிளியைப் பிடித்து நன்றாக கவனித்துப் பாருங்கள். மேற்கண்ட 7 பிராணிகளின் உருவ அமைப்பு தெரியவரும்.

“ரஹ்மத்” மாத இதழ், பிப்ரவரி 2017

பொட்டப்புள்ள

அவள் பொறப்பே ஒரு
போராட்டம் தான்..
தலைல இடி விழுந்துச்சுனு நெனச்சான் பெத்தவன்..
மயக்கத்துல கூட, தான் பெத்த புள்ளய நெனச்சு கண்ணுல தண்ணிய ஊத்துனா..

ஊருல இருக்க சில கெழடுங்க
கள்ளிபால கொஞ்சத்தையும்,
நெல்ல கொஞ்சத்தையும்
சிசுவோட குரல்வலைய நெறிக்க
வந்தாளுங்க..

யாரு செஞ்ச புண்ணியம்னு தெரியல, மனிதம் மரிச்சு போச்சுனு நினைக்கியில..
அவ உசுர காக்க சில பேரு வந்தாங்க..

அப்போ உசுர கையில புடிக்க ஆரம்பிச்சவ இப்போ வரைக்கும் புடிச்சிட்டு தான் இருக்கா..

பொறக்கவே பல போராட்டத்த கடந்து பொறந்தவ வாழ மட்டும் இந்த சமூகம் விட்டுறுமா என்ன…

அத வளக்கையில அவ ஆத்தா காது ஏச்சுக்கும் பேச்சுக்கும் அடிப்பட்டுதான் போச்சு..

காலு எடுத்து வச்சு நடக்கையிலே அப்பனோட காலுல மிதிப்பட்டு தான் வளந்துச்சு..

பள்ளிக்கூடம் போகையிலே பட்டாம்ப்பூச்சியா பறந்து தான் போனா…

சாயங்காலம் வந்ததுனா கூண்டுக்குள்ள கிளி போல அடஞ்சுதான் கிடந்தா..

எட்டாப்பு படிக்கையிலே வைத்து வலின்னு வந்து நின்னா…
மழல கூட மாறாத குழந்தைட்ட
பருவம் அடஞ்சத புரியவச்சா பெத்தவ..

இது தான் சமயம்னு
பொட்டபுள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு அப்பன்காரன் சுடுதண்ணியா கொதிச்சான்..

கண்ணுல தண்ணியும்
உயிருல வலியையும் சுமந்திட்டு
பதினஞ்சு நாள கழிச்சுட்டா..

பள்ளிக்கூடம் போகனும்னு ஆத்தா மடியில கண்ண கசக்கிகிட்டு வந்து படுத்தா..

இப்போ யாரு செஞ்ச புண்ணியம்னு தெரியல அவள பள்ளிக்கூடம் கூட்டி போக நாலு வாத்தியாரு வந்தாங்க..

சிறகு விரிச்சு பறந்து போனா தன்னோட உடன் படிக்கிறவள பாக்க…

முள் நெறஞ்ச பாதையில வாழ்க்கை போக, இன்னும் கொஞ்சம் முள்ள போட சில பேரு வந்தாங்க..

ஒருநாள் புத்தகபைய மாட்டிக்கிட்டு சின்ன குழந்தையா ஆடி பாடி நடந்து போகையில, காதலுனு ஒரு பையன் தொரத்திக்கிட்டு பின்னால வந்தான்..

இது தினம் தினம் நடக்கையிலே அது புரியாத பச்சிளமா பதறிக்கிட்டு ஓடிவந்தா ஆத்தாக்கிட்ட..

அது தான் சமயம்னு அப்பன்காரன் படிப்ப நிறுத்தி வீட்டோட மூளையில போட்டுப்புட்டான்..

அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எவனோ ஒருத்தன ஒருநாள் கூட்டி வந்தான்…

ஒன்னும் புரியாத இந்த மழலைய நாப்பது வயசு காரனக்கு கட்டி வச்சாங்க..

வயத்து வலி கூட புரியாதவ வயத்து நெரப்பிக்கிட்டு வந்தா பத்து மாசத்துல..
இந்த குழந்தையும் இன்னொரு குழந்தைய பெத்தெடுத்தா…

புள்ளபெத்த வலி கூட போகல அத கூட மறந்து புருசனுக்கு தினம் தினம் விரிச்சா முந்தானைய..

கசக்கி பிழிஞ்சு சக்கையா போட்டுப்புட்டு போனான்…
பச்சகுழந்த பசியில துடிக்க ரத்தத்த உருக்கி பாலா பசியாத்துனா..

தூக்கத்த தொலச்சு புள்ளய வளத்தா.. சந்தோசத்த தொலச்சு புருசனுக்கு முந்தானைய விரிச்சா…

குடிகாரன் புருசனுக்கு வாக்கப்பட்டு தினம் தினம் செத்து தான் பொழச்சா…

பல்ல கடிச்சிக்கிட்டு பெத்த புள்ளைக்காக வாழ்க்கைய ஓட்டுனா..

ஒருநாள் புருசன் மாரடச்சு ரோட்டுல விழுந்துபுட்டானு பதறி அடிச்சு ஆஸ்பத்திரிக்கு போனா…

போன வேகத்துல அவன் உசுரும் மேல போயுடுச்சு..கதறிக்கிட்டே காரியத்த முடிச்சா..

சொத்து காசுனு எதையும் சேத்து வச்சுட்டு போகல அந்த மகராசன்..

ஒத்து புள்ளய வளக்க பத்து பாத்திரம் தேக்க வீடு வீடா போனா இந்த மகராசி…

ஆத்தாவோட கஷ்டத்தபாத்து வளந்த புள்ள நல்லாவே படிச்சு பட்டத்தையும் வாங்குனான்..

வேலை தேடி நாலூரு போய் ஒரு கம்பெனில வேலைக்கு சேந்தான்..

நாப்பது வயசு கூட தொட்டிருக்க மாட்டா ஆனா பாதி உசுரா தேஞ்சு தான் போயிருந்தா..

முதல் மாச சம்பளத்த ஒரு சீலையோட ஆத்த கையில கொடுத்தான்…

பெத்தவ மனசு அப்போ தான் மார்கழி மாச குளிரு போல குளுந்துச்சு..

கொள்ளிவைக்க ஒத்தபுள்ளய பெத்தவ, மகன வளத்த சந்தோசத்துல கண்ண மூடுனா, புள்ள வாங்கி வந்த சீலைய கட்டி புடிச்சிட்டே.. 

ஆத்தா மடில படுத்த கெடந்தவன் கதறி துடிச்சி ஆஸ்பத்திரி தூக்கி போனான்.. ஆனா உசுரு பாதிலயே போயுடுச்சு…

கொள்ளி வச்சுப்புட்டு தன்னந்தனியா நடக்க ஆரம்பிச்சான் ஆத்தவோட ஆறுதல் இல்லாம…

உசந்த படிப்ப எல்லாம் படிக்க வச்சிட்டு ரொம்ப தூரமா போயிட்டா நிம்மதி இல்லாம அந்த ஆத்தா..

காரணம் யாருனு பாக்கையில அது இந்த ஆம்பளைங்க சமூகம் தான்..

ஒதுக்கீடுனு சொல்லும்போதே தெரியுது அது பிச்சைனு..

எந்த விதத்துல்ல குறஞ்சு போய்ட்டாங்கனு ஒதுக்க நினைக்கிறீங்க??

படுக்கைல கூட பசியானதும் குப்பையா கசக்கி தூரமா போடுறீங்க..

போட்டோவுல கூட பெருமைனு நெனச்சு கைய கட்டி பின்னால நிக்க வக்கிறீங்க..

பத்தாவது படிச்சாலே பெரிய படிப்புனு சொல்லி பெருமை பீத்துறீங்க..

சிலை செதுக்குற உளி போல வலியை மொத்தமும் வாங்கி உழைப்பா தேஞ்சு தான் போறா அந்த பொட்டப் புள்ள..

அவளுக்கு இது தான் கொடுக்கனும்னு முடிவு பண்ண நீ யாரு??

உரிமைய அவளே எடுத்துக்கிறது தான் அவளோட உரிமை..

எவ்ளோ தூரம் வேணாலும் பறக்கட்டும், எல்லையை நீ முடிவு செய்யாதே…

 

 

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js (adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொட்டப்புள்ள

அவள் பொறப்பே ஒரு
போராட்டம் தான்..
தலைல இடி விழுந்துச்சுனு நெனச்சான் பெத்தவன்..
மயக்கத்துல கூட, தான் பெத்த புள்ளய நெனச்சு கண்ணுல தண்ணிய ஊத்துனா..

ஊருல இருக்க சில கெழடுங்க
கள்ளிபால கொஞ்சத்தையும்,
நெல்ல கொஞ்சத்தையும்
சிசுவோட குரல்வலைய நெறிக்க
வந்தாளுங்க..

யாரு செஞ்ச புண்ணியம்னு தெரியல, மனிதம் மரிச்சு போச்சுனு நினைக்கியில..
அவ உசுர காக்க சில பேரு வந்தாங்க..

அப்போ உசுர கையில புடிக்க ஆரம்பிச்சவ இப்போ வரைக்கும் புடிச்சிட்டு தான் இருக்கா..

பொறக்கவே பல போராட்டத்த கடந்து பொறந்தவ வாழ மட்டும் இந்த சமூகம் விட்டுறுமா என்ன…

அத வளக்கையில அவ ஆத்தா காது ஏச்சுக்கும் பேச்சுக்கும் அடிப்பட்டுதான் போச்சு..

காலு எடுத்து வச்சு நடக்கையிலே அப்பனோட காலுல மிதிப்பட்டு தான் வளந்துச்சு..

பள்ளிக்கூடம் போகையிலே பட்டாம்ப்பூச்சியா பறந்து தான் போனா…

சாயங்காலம் வந்ததுனா கூண்டுக்குள்ள கிளி போல அடஞ்சுதான் கிடந்தா..

எட்டாப்பு படிக்கையிலே வைத்து வலின்னு வந்து நின்னா…
மழல கூட மாறாத குழந்தைட்ட
பருவம் அடஞ்சத புரியவச்சா பெத்தவ..

இது தான் சமயம்னு
பொட்டபுள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு அப்பன்காரன் சுடுதண்ணியா கொதிச்சான்..

கண்ணுல தண்ணியும்
உயிருல வலியையும் சுமந்திட்டு
பதினஞ்சு நாள கழிச்சுட்டா..

பள்ளிக்கூடம் போகனும்னு ஆத்தா மடியில கண்ண கசக்கிகிட்டு வந்து படுத்தா..

இப்போ யாரு செஞ்ச புண்ணியம்னு தெரியல அவள பள்ளிக்கூடம் கூட்டி போக நாலு வாத்தியாரு வந்தாங்க..

சிறகு விரிச்சு பறந்து போனா தன்னோட உடன் படிக்கிறவள பாக்க…

முள் நெறஞ்ச பாதையில வாழ்க்கை போக, இன்னும் கொஞ்சம் முள்ள போட சில பேரு வந்தாங்க..

ஒருநாள் புத்தகபைய மாட்டிக்கிட்டு சின்ன குழந்தையா ஆடி பாடி நடந்து போகையில, காதலுனு ஒரு பையன் தொரத்திக்கிட்டு பின்னால வந்தான்..

இது தினம் தினம் நடக்கையிலே அது புரியாத பச்சிளமா பதறிக்கிட்டு ஓடிவந்தா ஆத்தாக்கிட்ட..

அது தான் சமயம்னு அப்பன்காரன் படிப்ப நிறுத்தி வீட்டோட மூளையில போட்டுப்புட்டான்..

அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எவனோ ஒருத்தன ஒருநாள் கூட்டி வந்தான்…

ஒன்னும் புரியாத இந்த மழலைய நாப்பது வயசு காரனக்கு கட்டி வச்சாங்க..

வயத்து வலி கூட புரியாதவ வயத்து நெரப்பிக்கிட்டு வந்தா பத்து மாசத்துல..
இந்த குழந்தையும் இன்னொரு குழந்தைய பெத்தெடுத்தா…

புள்ளபெத்த வலி கூட போகல அத கூட மறந்து புருசனுக்கு தினம் தினம் விரிச்சா முந்தானைய..

கசக்கி பிழிஞ்சு சக்கையா போட்டுப்புட்டு போனான்…
பச்சகுழந்த பசியில துடிக்க ரத்தத்த உருக்கி பாலா பசியாத்துனா..

தூக்கத்த தொலச்சு புள்ளய வளத்தா.. சந்தோசத்த தொலச்சு புருசனுக்கு முந்தானைய விரிச்சா…

குடிகாரன் புருசனுக்கு வாக்கப்பட்டு தினம் தினம் செத்து தான் பொழச்சா…

பல்ல கடிச்சிக்கிட்டு பெத்த புள்ளைக்காக வாழ்க்கைய ஓட்டுனா..

ஒருநாள் புருசன் மாரடச்சு ரோட்டுல விழுந்துபுட்டானு பதறி அடிச்சு ஆஸ்பத்திரிக்கு போனா…

போன வேகத்துல அவன் உசுரும் மேல போயுடுச்சு..கதறிக்கிட்டே காரியத்த முடிச்சா..

சொத்து காசுனு எதையும் சேத்து வச்சுட்டு போகல அந்த மகராசன்..

ஒத்து புள்ளய வளக்க பத்து பாத்திரம் தேக்க வீடு வீடா போனா இந்த மகராசி…

ஆத்தாவோட கஷ்டத்தபாத்து வளந்த புள்ள நல்லாவே படிச்சு பட்டத்தையும் வாங்குனான்..

வேலை தேடி நாலூரு போய் ஒரு கம்பெனில வேலைக்கு சேந்தான்..

நாப்பது வயசு கூட தொட்டிருக்க மாட்டா ஆனா பாதி உசுரா தேஞ்சு தான் போயிருந்தா..

முதல் மாச சம்பளத்த ஒரு சீலையோட ஆத்த கையில கொடுத்தான்…

பெத்தவ மனசு அப்போ தான் மார்கழி மாச குளிரு போல குளுந்துச்சு..

கொள்ளிவைக்க ஒத்தபுள்ளய பெத்தவ, மகன வளத்த சந்தோசத்துல கண்ண மூடுனா, புள்ள வாங்கி வந்த சீலைய கட்டி புடிச்சிட்டே.. 

ஆத்தா மடில படுத்த கெடந்தவன் கதறி துடிச்சி ஆஸ்பத்திரி தூக்கி போனான்.. ஆனா உசுரு பாதிலயே போயுடுச்சு…

கொள்ளி வச்சுப்புட்டு தன்னந்தனியா நடக்க ஆரம்பிச்சான் ஆத்தவோட ஆறுதல் இல்லாம…

உசந்த படிப்ப எல்லாம் படிக்க வச்சிட்டு ரொம்ப தூரமா போயிட்டா நிம்மதி இல்லாம அந்த ஆத்தா..

காரணம் யாருனு பாக்கையில அது இந்த ஆம்பளைங்க சமூகம் தான்..

ஒதுக்கீடுனு சொல்லும்போதே தெரியுது அது பிச்சைனு..

எந்த விதத்துல்ல குறஞ்சு போய்ட்டாங்கனு ஒதுக்க நினைக்கிறீங்க??

படுக்கைல கூட பசியானதும் குப்பையா கசக்கி தூரமா போடுறீங்க..

போட்டோவுல கூட பெருமைனு நெனச்சு கைய கட்டி பின்னால நிக்க வக்கிறீங்க..

பத்தாவது படிச்சாலே பெரிய படிப்புனு சொல்லி பெருமை பீத்துறீங்க..

சிலை செதுக்குற உளி போல வலியை மொத்தமும் வாங்கி உழைப்பா தேஞ்சு தான் போறா அந்த பொட்டப் புள்ள..

அவளுக்கு இது தான் கொடுக்கனும்னு முடிவு பண்ண நீ யாரு??

உரிமைய அவளே எடுத்துக்கிறது தான் அவளோட உரிமை..

எவ்ளோ தூரம் வேணாலும் பறக்கட்டும், எல்லையை நீ முடிவு செய்யாதே…

https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சிறு விரல்

அந்த சிறு விரல்

என் கரம் பற்றியபொழுது

பெற்ற வலியை அவள் மறந்தாலோ என்னவோ?

இத்தனை நாளாக இருவரையும் சுமந்த நான், அதன் வலியை மறந்தே போனேன்.

வாழ்வின் அர்த்தம் மாற்றிய அவனின் அந்த புன்னகை போதும்.

இன்னும் ஒரு நூறாண்டு வாழவே தோன்றும்.

தமிழகத்தில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு

தமிழகத்தில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு….

நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா ? ஊர் ஊராக சுற்றும் போது சுவையான தரமான உணவை சாப்பிட விருப்புவரா? தமிழகத்தில் பல இடங்களில் பலர் சாப்பிட்டதை வைத்து தொகுக்கப்பட்ட ஒரு உணவுக்கடையின் தொகுப்புகள்

நியூ சன்ரைஸ், கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம், விழுப்புரம். Special : பாப்கார்ன்

குணா சுக்குகாபி, மானாம்பதி, திருப்போரூர். Special : சுக்குகாபி

பசும்பால் பஞ்சாமி அய்யர் கடை, கும்பகோணம். Special : காபி

முராரி ஸ்வீட், கும்பகோணம். Special : பூரி, பாஸந்தி, ட்ரை ஜாமூன்களுக்கும் பிரபலமான கடை(மயிலாடுதுறை மற்றும் திருவாரூரிலும் கிளைகள் உண்டு)

ஸ்ரீ கிருஷ்ணா ஹோட்டல், வடவள்ளி, கோவை. Special : மட்டன் குழம்பு, தந்தூரி சிக்கன்

ஹோட்டல் உஷா ராணி, இளம்பிள்ளை, வேம்படிதாளம், சேலம். Special : மூளை வறுவல், நாட்டு கோழி பெப்பர் வறுவல், மட்டன் சுக்கா

மயில் மார்க் மிட்டாய் கடை, திருச்சி, திருச்சி ரயில்வே ஸ்டேஷன் எதிரே. Special : முந்திரி அல்வா, முந்திரி பக்கோடா

ராஜூ ஆம்லேட், பரோடா ஓல்ட் பத்ரா ரோடு. Special : ஆம்லேட்

ஷஹ்ரன் ஹோட்டல், ஹைதராபாத் சார்மினார் கோபுரம். Special : லஸ்ஸி பலூடா

முதலியார் கடை, மதுரை தேவர் சிலை அருகே, மதுரை கோரிப்பாளையம் பஸ் ஸ்டாப். Special : முட்டை இட்லி

R.ரெங்கநாதன் கரம் கடை(செட்டி கடை), ஜவஹர் பஜார் கருப்பாயி கோவிலுக்கு சிறிது முன்பு, கரூர். Special : சீம் பால் கட்டி

AJJ மஸ்கோத் அல்வா, முதலூர், தூத்துக்குடி. Special : மஸ்கோத் அல்வா

காளத்தி கடை கிழக்கு மாட வீதி, மைலாபூர். Special : ரோஸ் மில்க்

கந்தன் தட்டு வடை செட், சேலம் பஜார் தெருவில்,கோயம்புத்தூர் ஜுவல்லரியின் பின்புறம் ஆற்றோடு ஒட்டிய பார்கிங் இடத்தில் ஒரு சிறிய TVS 50 Special : தட்டு வடை செட்.

கௌரி மெஸ், ராம் நகர், கோவை. Special : சிக்கன் கிரேவி, பூ மீன்

‘மங்களாம்பிகா’ இட்லி, கும்பகோணம். Special : மிளகாய்ப் பொடி, இட்லி

JB சவுத்திரி பாதாம் பால் கடை, மேற்கு மாசி வீதி, மதுரை. Special : பாதாம் பால்

விருத்தாசலம். Special : தவலை வடை !!

ஆறுமுகம் பரோட்டா ஸ்டால், மதுரை அழகர் கோவில் ரோடு, தல்லாகுலம். Special : பரோட்டா

112 இலக்கம், மதுரை காமராஜர் சாலை, பழைய குயவர் பாளையம் சாலை, அழகர்கோவில். Special : தோசை

NNK மற்றும் NNR, அம்மாபேட்டை, சேலம் TVK ரோட்டில். Special : எசென்ஸ் தோசை

திண்டுக்கல் சிவா பிரியாணி, வேணு பிரியாணி இருக்கும் அதே தெரு. Special : மிளகு கொழம்பு

ஆதிகுடி ரவா பொங்கல், தேவர் ஹால் பஸ் ஸ்டாப், திருச்சி மெயின் கார்ட் கேட், கெயிட்டி, திருச்சி. Special : ரவா பொங்கல்

மௌலானா பேக்கரி, கூத்தாநல்லூர். Special : தம்ரூட்

உடுப்பி கிருஷ்ண விலாஸ், சிதம்பரம். Special : கத்திரிக்காய் கொத்சு

ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால், ராமசேரி, கோயம்பத்தூரில் இருந்து பாலக்காடு ரோட்டில். Special : இட்லி

SRR கபே, திருவாரூர் பேருந்து நிலையம். Special : கலவை சாதங்கள்

வாசன், திருவாரூர். Special : பாதாம்அல்வா

உடுப்பி கிருஷ்ணா போளி ஸ்டால், 17, டான்சி நகர் , இரண்டாவது தெரு, தரமணி லிங்க் ரோடு , வேளச்சேரி. Special : போளி, மற்றும் இனிப்பு வகைகள்.

A -1 ஹோட்டல், பெருமாள்புரம் ரவுண்டானா அருகில், திருநெல்வேலி. Special : சிக்கன் 65, மஜ்ரா சிக்கன், ஜிஞ்சர் சிக்கன்

வசந்த பவன், பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி. Special : மதிய உணவு மற்றும் பரோட்டா

PLA கிருஷ்ணா இன், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில். Special : பாயசம் மற்றும் அப்பளம்

தேவர் ஹோட்டல், ராஜப்பா நகர், மெடிக்கல் காலேஜ் ரோடு, தஞ்சாவூர். Special : பருப்பு உருண்டை குழம்பு

அவ்வா இட்லி கடை, பூ மார்க்கெட், செளடேஸ்வரி கோவில் பின்புறம், கோவை. Special : இட்லி

வளர்மதி மெஸ், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : பிச்சிப்போட்ட கோழி, நெத்திலி மீன் ஃப்ரை

ஸ்ரீகெளரி மெஸ், ராம் நகர், காந்திபுரம், கோவை. Special : கட்லா மீனும், சிக்கன் கிரேவியும்

கண்ணன்ணன் விருந்து, RS புரம் TV சாமி ரோடு புடிச்சு மேட்டுப்பாளையம் ரோடு நோக்கி. Special : குடல் கூட்டு, மட்டன் சாப்ஸ், நாட்டுக் கோழி வறுவல்..

டோபாஸ் ஐயர் மெஸ், பேரூர், கோவை. Special : ஊத்தாப்பம், ஆனியன் ரோஸ்ட், மசால் ரோஸ்ட்

சத்யா மெஸ், புற்றுக்கண் மாரியம்மன் கோயில் அருகே, பாப்பநாயக்கன் பாளையம், கோவை. Special : கம்பு தோசை, சோள தோசை, ராகி தோசை, கோதுமை தோசை

வைரவிழா பள்ளி அருகில் உள்ள பாய் கடை. Special : காரப்பொறி

ஜெர்மன் ஹோட்டல், காரணம்பேட்டை, சூலூர். Special : நாட்டுக் கோழி வறுவல், கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானு

மதுரை அம்மா மெஸ், பவர் ஹவுஸ் ரோடு, கோவை. Special : சாப்பாடு

படையப்பா மெஸ், குமரன் சாலை, திருப்பூர். Special : முயல் கறி ஸ்பெசல்

இந்தியன் பஞ்சாபி தாபா, சித்தோடு, ஈரோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன், நாட்டுக்கோழி, பாயாசத்தில் சேமியாவும், முந்திரியும்

தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை. Special : பரோட்டா

மாரிமுத்து போண்டா கடை, முருகாலயா தியேட்டர் நேர் எதிரே, பொள்ளாச்சி. Special : போண்டா பஜ்ஜி

அபூர்வ விலாஸ், கணபதி, கோவை. Special : தேங்காய் பால், பலகாரம் ஸ்பெசல்

ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலணி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

கடுக்கன் விலாஸ், வஉசி பூங்கா அருகில், ஈரோடு. Special : கம்மங்கூழ், ராகிக் கூழ், தயிர் வடை, மசால மோர்

ஓம்சக்தி ஹோட்டல், இடையர் வீதி அருகே உள்ள குரும்பூர் சந்து, மநக வீதி, கோவை. Special : சிக்கன் 65

திருமூர்த்தி டீ & டிபன் ஸ்டால், அவிநாசி புது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் வழியில் இடப்பக்கம் நடக்கும் தூரத்தில் உள்ளது. Special : தோசை, ஆப்பம்

ரயிலடி சுப்பையா மெஸ், தஞ்சை. Special : ஏழு வகை சட்னியுடன் சுவை மிக்க இரவு சிற்றுண்டி

பாரதியார் உணவகம், வரதராஜா மில் அருகில், பீளமேடு. Special : திண்டுக்கல் ரோஸ்ட், மற்றும் கோதுமை தோசை

பிங்க்பெர்ரி, 100 ஃபீட் ரோடு, தூபன்ஹள்ளி, இந்திரா நகர், பெங்களூர். Special : தயிர்கிரீம்

குணங்குடிதாசன் சர்பத், கீழவாசல், தஞ்சாவூர். Special : பால் சர்பத்

ஜன்னல் கடை, மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில் இடதுபுறம் சந்தில், சென்னை

கௌரி சங்கர் ரசவடை, வடசேரி, நாகர்கோவில். Special : ரசவடை

ஆதிகாலத்து ஒரிஜினல் நெய் மிட்டாய் கடை, மீனாட்சி அம்மன் கோவிலின் கீழ ஆவணி மூல வீதியில், மதுரை. Special : கிழங்கு பொட்டலம்

A.V.K மீன் சாப்பாட்டு கடை, ஆர்காட் ரோடு, L.V பிரசாத் ரோடு. Special : மீன் சாப்பாட்டு

குஞ்சான் செட்டி கடை, மன்னார்குடி. Special : காராபூந்தி, மைசூர்பாக்.

டெல்லி ஸ்வீட்ஸ், மன்னார்குடி. Special : முந்திரி அல்வா

ரோஜா மார்க் இனிப்புகள், கும்பகோணம். Special : ஸ்பெஷல் கமர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை

ரத்னா கபே, திருவல்லிக்கேணி. Special : சாம்பார்

சங்கர விலாஸ், கீழ ஆண்டார் வீதி, திருச்சி. Special : பூரி, கடப்பா

தஞ்சாவூர் மெஸ், மேற்கு மாம்பலம், சென்னை. Special : பூரி,கடப்பா

பார்த்தசாரதி விலாஸ், மேலவிபூதி பிரகாரம், திருவானைக்கா கோயில். Special : நெய் தோசை

சொசைட்டி பால்கோவா, மணப்பாறை. Special : பால்கோவா

இத்தாலியன் பேக்கரி, கும்பகோணம், தஞ்சை அய்யம்பேட்டை. Special : டீ, காபி, பிஸ்கட்

கோபு ஐயங்கார் கடை, மதுரை, மீனாக்ஷி அம்மன் கோவில். Special : சீவல் தோசை

சென்னையிலிருந்து பெங்களூருக்கோ, கோவைக்கோ, இல்லை எங்கயோ ஆம்பூர் வழியாக ரயிலில் பயணித்தால், ஆம்பூர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்த நம்பர்களில் ஸ்டார் பிரியாணிக்கு 04174 249393, CELL : 9894247373 போன் செய்து பிரியாணி ஆர்டர் செய்து உங்கள் கோச் நம்பரையும் சொல்லி விட்டால் ஆம்பூர் ரயில் நிலையத்தில் உங்கள் கோச்சில் வந்து டெலிவரி செய்கிறார்கள்.

காபி பேலஸ், எல்லையம்மன் கோயில் தெரு, தஞ்சாவூர். Special : டீ, காபி. வடிந்து இரண்டு மணி நேரத்துக்கு மேலான டிக்காஷனை உபயோகிப்பதில்லை. அதேபோல் ஒரு தூளில் இரு முறைக்கு மேல் டிக்காஷன் எடுப்பதுமில்லை.

ராவ்ஜி தள்ளுவண்டி பிரியாணி கடை, திருச்சி பெரிய கடைவீதி. Special : பிரியாணி

காவேரி ஜூஸ் கடை, 5 கார்னர், கோவை. Special : நன்னாரி சர்பத், ரோஸ் மில்க்

பிரியா, கோவை சித்தாப்புதூர் அய்யப்பன் கோவில். Special : அடப்பிரதமன்

சிவ விலாஸ் ஹோட்டல், கோவை, கணபதி. Special : தேங்காய் பால்

மயூரா பேக்கரி, கருமத்தம்பட்டி மெயின் ஜங்ஷன். Special : காரட் கேக்

பழனியம்மா பாட்டி டீக்கடை, சரவணம்பட்டி, கோவை. Special : இஞ்சி டீ

கணபதி மெஸ், வடவள்ளி பழமுதிர் நிலையம் அருகே, கோவை. Special : ஈவ்னிங் வெஜிடேரியன் டிபன்.

பர்மா பாய் கடை, கோவை. Special : பரோட்டா பெப்பர் லெக்

எஸ்.ஆர்.கே.பி மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

ஸ்ரீசாய் கபே, கோவை அண்ணா சிலை. Special : ஃபுல் மீல்ஸ்

Barbeque Nation, கோவை டவுன் ஹால். Special : Unlimited Barbeque

மீசை பாணி பூரி, சுக்ரவார்பேட்டை. Special : முட்டை பூரி

கொங்கு மெஸ், ஹோப் காலேஜ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

பாபு ஹோட்டல், கோவை சுந்தராபுரம் பஸ்ஸ்டாப். Special : ஆப்பம், சாம்பார் பொடி

SMS ஹோட்டல், கோவை, Special : நல்லி எலும்பு சூப், மட்டன் கீமா, தோசை

கீர்த்தி மெஸ், தெற்கு ஆர்.டி.ஓ ஆபீஸ், கோவை. Special : ஃபுல் மீல்ஸ்

அன்ன பூரணி மெஸ், காந்திபுரம் வீதி 1, கோவை. Special : அனைத்து வகை சிற்றுண்டி

ஆஜ்மர் பிரியாணி, மணி கூண்டு, கோவை. Special : பிரியாணி, குஸ்கா

MR ஹோட்டல், கோவை நேரு ஸ்டேடியம். Special : நாட்டுக் கோழி லெக் பீஸ் ப்ரை

CFC HOT FRIED CHICKEN, கோவை ராம்நகர் சிட்டி டவர் ஹோட்டலில். Special : வறுத்த கோழி

நல்உணவு, கோவை ஆர்எஸ் புரம் அன்னபூர்ணா அருகில். Special : சிறு தானியங்கள் உணவு

பிரியாணி மண்டி, ராம்நகர் காளிங்கராயர் தெரு. Special : பிரியாணி

ஹாஜி முத்து ராவுத்தர் பிரியாணி, உக்கடம், கோவை. Special : பிரியாணி, அரி பத்திரி

லக்ஷ்மி சங்கர் மெஸ், ஜி சி டி, கோவை. Special : ஃபுல் மீல்ஸ், எண்ணையில்லா சாப்பாடு

ஆச்சி மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : 12 வகை வெரைட்டி சாத வகைகள்

சஹாய் க்ரில்ஸ், கோவை, பீளமேடு. Special : செட்டிநாடு க்ரில், பெப்பர் க்ரில்

ஸ்ரீ லக்ஷ்மி நாராயண டீ காஃபீ, வரதராஜபுரம், கோவை. Special : குருமா, பரோட்டா

கோவை RS புரம் பாலாஜி மெஸ், பெண்களே சமையல். Special : மீன் குழும்பு, கைமா வடை

அம்மா மெஸ், லாரி பேட்டை, கோவை. Special : மீன் குழம்பு, மீன் சாப்பாடு

குப்பண்ணா ஹோட்டல், கோயம்புத்தூர், ராம்நகர். Special : அசைவ சாப்பாடு

சி கே மீல்ஸ், ரயில் நிலயம், கோவை. Special : அளவுச் சாப்பாடு

வில்லேஜ் லஞ்ச் ஹோட்டல், கோவை ரெக்ஸ் ஆஸ்பத்திரி. Special : அனைத்து வித தோசைகள்

பாரதி மெஸ், NEAR NATIONAL MODEL SCHOOL, கோவை. Special : அனைத்து வித தோசைகள்

கீதா கெண்டீன், ரயில் நிலையம், கோவை. Special : அனைத்து வகை டிபன்

கண்ணணண் கறி விருந்து, கோவை. Special : நாட்டுக்கோழி சிக்கன், புதினா சிக்கன்

சுப்பு மெஸ், ரயில் நிலையம், கோவை. Special : சைவ, அசைவ ஃபுல் மீல்ஸ்

ஃபுட் கார்டன், RS Puram, கோவை. Special : தயிர் பூரி

குப்தா ஜி சாட்ஸ், கோவை சாய்பாபா காலனி, சர்ச் ரோடு. Special : தயிர் பூரி

வைரமாளிகை, நெல்லை. Special : ப்ரைடு சிக்கன், ஷார்ஜா மில்க்‌ஷேக்

உமர்கையாம், லலிதா ஜுவல்லரி, தி.நகர். Special : எண்ணெய் கத்தரிக்காய், தாள்ச்சா முஸ்லீம் வீட்டு பிரியாணி

மாமு கார்டன் ஹோட்டல், பரமக்குடி. Special : சைனீஸ் உணவு

சுகுணவிலாஸ் ஹோட்டல், அண்ணா சிலை, கடை வீதி, திருசெங்கோடு. Special : பள்ளிபாளையம் சிக்கன்

சீனியப்பா ஹோட்டல், கீழக்கரை. Special : பரோட்டா, சால்னா

ஜெய் சக்தி சைவ ஹோட்டல், கோவில்பட்டி. Special : நிறைய மிளகு போட்டு CHETTINAADU சூப்

ஃப்ளெமிங்கோ ஹோட்டல், வேளச்சேரி 100 அடி பை பாஸ் ரோடு. Special : சாப்பாடு

மாயாபஜார், சேலம். Special : நான்வெஜ் ஹோட்டல்,

மாமன் பிரியாணி, ஈரோடு பன்னீர் செல்வம் பார்க். Special : பிரியாணி

அன்னை மெஸ், குன்னத்தூர் பஸ் ஸ்டாண்ட். Special : நாட்டுக் கோழிக் குழம்பு, ஆசாரி வறுவல்.

செந்தில் மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. Special : மதுரை மட்டன் சுக்கா

மீனாட்சி மெஸ், யானைமலை, ஒத்தக்கடை. Special : மதுரை மட்டன் சுக்கா

கதிர்வேல் வாத்துக்கடை, வேலூர் பரமத்தி. Special : வாத்துமுட்டை ஆம்லெட்

பார்டர் ரஹ்மத் புரோட்டாக்கடை, தென்காசி. Special : பெப்பர்சிக்கன், பெப்பர்காடை

பொன்னுசாமி ஹோட்டல், ராயபேட்டை. Special : நெத்திலி ப்ரை, சிக்கன் லாலிபாப்

தூத்துக்குடி பரோட்டோ கடை, கோவை ஹோப்ஸ். Special : பரோட்டோ

தோசா கார்னர், சேலம் அத்வைத் ஆஸ்ரமம் ரோடு. Special : அனைத்து வித தோசைகள்

செல்வம் ஹோட்டல், சேலம் அப்சரா மேடு. Special : பரோட்டா சால்னா

ராணி டிபன் ஸ்டால், கரூர். Special : கொத்து பரோட்டா

தேவர் மெஸ், சுங்கராம வீதி, பாரீஸ். Special : பரோட்டா குருமா:

மாருதி ஹோட்டல், சுசீந்திரம். Special : ஃபுல் மீல்ஸ்

டைமண்ட் டீ ஸ்டால், பழனி பஸ் ஸ்டாண்ட். Special : டீ

ராயல் புரோட்டாஸ், கரூர்-பள்ளபட்டி. Special : அனைத்து வித புரோட்டா

ஹோட்டல் சத்தார்ஸ், தஞ்சாவூர். Special : பிரியாணி

சென்ட்ரல் பிரியாணி கடை, திருப்பூர் காங்கேயம் கிராஸ் ரோடு. Special : பிரியாணி

ஜோஸ் கடல் மீன் உணவகம், குமார் நகர், திருப்பூர். Special : கடல் மீன் உணவு

ஆச்சிஸ், திண்டுக்கல். Special : அயிரை மீன் பக்கோடா

செல்லம்மாள் மண்பானை உணவகம், திருச்சி புத்தூர் திரவுபதி அம்மன் கோவில் எதிரில். Special : ஃபுல் மீல்ஸ்

முத்துபிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. Special : பரோட்டா 4 வகை சால்னா

தீன், தஞ்சாவூர். Special : சிக்கன் முர்தாபா

சார்மினார், ராயப்பேட்டை. Special : தந்தூரி சிக்கன்

கணேஷ் மெஸ், ஆண்டிபட்டி. Special : பூசணிப் பொரியல்

ஆனந்தாஸ் ஹோட்டல், ராஜபாளையம். Special : ஃபுல் மீல்ஸ்

சலாமத் ஹோட்டல், அண்ணாசாலை, சென்னை. Special : சுக்கா பரோட்டா

தங்கையா ஸ்வீட் ஸ்டால், திசையன்விளை. Special : மஸ்கோத் அல்வா

ஶ்ரீ சாய் உயர் தர சைவ உணவகம், தஞ்சாவூர் மெயின் ரோடு, திருச்சி. Special : ஆனியன் ஊத்தப்பம்

கதிரவன் ஹோட்டல், ஸ்ரீவில்லிப்புத்தூர். Special : காபி

ஆள் ரீம், திருவல்லிக்கேணி. Special : பிரியாணி

தாஸ் ஜிகர்தண்டா, பெரியகுளம் ரோடு, தேனி பழைய பஸ்ஸ்டாண்ட். Special : ஜிகர்தண்டா

டேன்ஜரின் ரெஸ்டாரன்ட், ரேஸ்கோர்ஸ், கோவை. Special : சாப்பாடு

சாய் கப்சப், RS PURAM, கோவை. Special : இஞ்சி டீ:

இளநீர் சர்பத் கடை, பெல் ஹோட்டல் எதிரில், மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு. Special : இளநீர் சர்பத்

ஸ்ரீ விநாயக ஸ்வீட் காரம், குருக்கத்தி. Special : எள்ளுருண்டை

அரசன் மெஸ் மண்பானை சமையல், திருநெல்வேலி, மதுரை பைபாஸ் சாலை. Special : அன் லிமிட்டட் சாப்பாடு

ஸ்ரீ கிருஷ்ணபவன், கும்பகோணம் ரயில் நிலையம் வெளியேறும் பாதை. Special : அனைத்து வித தோசைகள்

நாயர் மெஸ், திருவல்லிக்கேணி. Special : மட்டன் குழம்பு வஞ்சிரம் வறுவல்

ஆந்திரா கரீ ஹோட்டல், தங்க ரீகல் தியேட்டர், மதுரை. Special : தட்டு இட்லி

அழகப்பா செட்டிநாடு மெஸ், GST மெயின்ரோடு, சானடோரியம், சென்னை. Special : குஸ்கா

அழகி பிரியாணி ஹோட்டல், ஒக்கேனக்கல் மெயின் ரோடு. Special : அன்லிமிடட் பிரியாணி

பழநியப்பா மெஸ், புதுக்கோட்டை. Special : பஃப் பரோட்டோ

ஜானகிராமன் சைவ உணவகம், திருநெல்வேலி பெரியார் பேருந்து நிலையம் அருகே. Special : அனைத்து வித தோசைகள்

Jacob’s Kitchen, காதர் நவாஸ் கான் ரோடு, கானாடுகாத்தான். Special : உப்புகறி, மண்பானை மீன் குழம்பு

பிரேமா மெஸ், தூத்துக்குடி பழைய பஸ்ஸ்டாண்ட். Special : கானத்துவையல், எள்ளுத்துவையல்

அண்ணாமலை சைவ ஹோட்டல், நெல்லை காந்திமதி கோவில். Special : மதிய சாப்பாடு, பிரண்டை துவையல்

அஜித் மீன் ஹோட்டல், நாகர்கோவில். Special : ஃபுல் மீன் மீல்ஸ்

அக்பர் மெஸ், பெரியமேடு. Special : மட்டன் பிரியாணி

வெங்கடேஷ்வரா ஹோட்டல், அப்பத்தூர். Special : சமோசா

பரமக்குடி பரோட்டா, பரமக்குடி பஸ் ஸ்டான்ட் எதிரில். Special : சால்னா

JMS சர்பத் கடை, திண்டுக்கல். Special : சர்பத்

ஸ்ரீ பாலாஜி பவன் ஹைகிளாஸ் வெஜ ஹோட்டல், திண்டுக்கல். Special : ஃபுல் வெஜ் மீல்ஸ்

சார்லஸ் ஹோட்டல், மதுர நரிமேடு அரசன் சுவீட்ஸ் அருகில். Special : பரோட்டா, 3 கூட்டு சால்னா

பைவ் ஸ்டார் இரவு ஹோட்டல், சின்னசேலம். Special : தோசை, நாலு வகை சட்னி

மொஹைதீன் பிரியாணி, பல்லாவரம். Special : பிரியாணி

போஜன், சூளைமேடு சிக்னல். Special : சோலா பூரி

ரிலாக்ஸ் காபி பார், திண்டுக்கல். Special : வடை, குருமா

பட்ஸ் ஹோட்டல் டீ, தாம்பரம் பஸ்டாண்ட் உள்ளே. Special : Tea

ஹரிஷ் பேக்கரி உப்பு ரொட்டி, நாகூர். Special : உப்புரொட்டி, தம்ரூட்

சபரீஷ் ஹோட்டல், மதுரை சென்னை சில்க்ஸ் அருகே. Special : ஹைதரபாத் பிரியாணி :

கேரளா மெஸ், திருச்சி அஹ்மத் பிரதர்ஸ்கு பக்கத்து சந்து. Special : பரோட்டா வித் சில்லி

காந்தி கடை சால்னா, பரமக்குடி. Special : பரோட்டா :

குறிஞ்சி ஹோட்டல், இராம்நாட். Special : பரோட்டா, நெய் மீன் கறி

அப்பா மெஸ், திருப்பூர் கரட்டாங்காடு பஸ் ஸ்டாப். Special : ஃபுல் மீல்ஸ்

மணி கவுண்டர் மெஸ், திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு. Special : சிந்தாமணி சிக்கன்

அல் ரீம் ஹோட்டல், திருவல்லிக்கணி. Special : ஸ்பெசல் பிரியாணி, ப்ரைடு ரைஸ்

புளியமரத்துக்கடை, ஶ்ரீவில்லிபுத்தூர். Special : ஸ்பெஷல் பால்கோவா

ஸ்ரீ அன்பு பவன், கோபி பஸ் நிலையம், கோபி. Special : ஃபுல் மீல்ஸ்

தனசேகர் சிக்கன் சென்டர், முத்துநாயக்கன்பட்டி. Special : சிக்கன்

தம்புடு ஹோட்டல், பல்லடம் போலிஸ் ஸ்டேசன். Special : இரவு இட்லி, ரோஸ்ட், பரோட்டா

செட்டியார் கடை, திருப்பூர். Special : டயனமைட் சிக்கன் :

Aachi Chetinad Hotel ஹோட்டல், ஈரோடு டெலிபோன் எக்ஸ்‌சேன்ஜ். Special : மூளை பிரட்டல்

BL ரெஸ்டாரன்ட், கரூர். Special : காரசட்னி இட்லி :

கண்ணன் ஹோட்டல், மதுரை புதூர் சர்ச். Special : மூளை ஃப்ரை

அம்மன் மெஸ், கோபிச்செட்டிபாளையம் சீதாலட்சுமி மண்டபம் அருகில். Special : சைவம் அசைவம் உணவு

சுதா மெஸ், குமாரபாளையம். Special : அசைவம் வீட்டு சாப்பாடு :

பத்மா மெஸ், விழுப்புரம் கலெக்டர் ஆஃபீஸ் அருகில். Special : அனைத்து வித தோசைகள், ஃபுல் மீல்ஸ்

சுல்தான் பிரியாணி, சங்கரன்கோவில். Special : பிரியாணி

கரம் மது கரம் ஸ்டால், கரூர் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகில், கரூர். Special : Sweets

ராமசாமி மட்டன், திருப்பூர் புதிய பஸ்நிலையம், திருப்பூர். Special : மட்டன், குடல்பிஃரை

சிவா சில்லி, கரூர் செங்குந்தபுரம். Special : மீன், சில்லி சிக்கன், பிரியாணி

மிட்நைட் மசாலா ஹோட்டல், கோடம்பாக்கம். Special : லஞ்ச், டின்னெர்.

சுப்பையா இட்லி கடை, தஞ்சாவூர் JUNCTION. Special : இட்லி

கோபால்நாயுடு ஹோட்டல், இளம்பிள்ளை. Special : ஃபுல் மீல்ஸ்

ராவியத் ஸ்வீட் பேலஸ், வள்ளல் சீதக்காதிரோடு, கீழக்கரை. Special : ஸ்பெஷல் தொதல்

கற்பகம் ஹோட்டல், திருச்சி தேவர்ஹால் எதிர்புறம். Special : இட்லி, தோசை, சாம்பார்

ஸ்ரீபிரியா மெஸ், காரைக்குடி. Special : நாட்டுக்கோழி கிரேவி

ஹோட்டல் ராமன், சீர்காழி புத்தூர் சாலை. Special : மீன் வறுவல், இறா வறுவல்

வீட்டு இட்லி, மதுரை அலங்கார் தியேட்டர் அருகில். Special : வீட்டு இட்லி, ஃபுல் மீல்ஸ்

ஹோட்டல் அர்ச்சனா, மதுரை. Special : நண்டு தோசை :

கவுண்டர் மெஸ், அவினாசி ஆட்டயாம்பாளையம். Special : அசைவச் சாப்பாடு

முத்துமெஸ், தாராபுரம் ரோடு, திருப்பூர். Special : அசைவ சாப்பாடு

செல்லமணி டிபன் கடை, தேனி. Special : 5 வகை சட்னி, பணியாரம்

செல்வம் கூல் ட்ரிங்க்ஸ், சிவகிரி. Special : ஐஸ்கிரீம்

அ1 மெஸ், கோவில்பட்டி. Special : அசைவ சாப்பாடு

இந்திராணி அக்கா இட்லி கடை, காரணம் பேட்டை. Special : இட்லி

திருப்பூர் ஷெரிப் காலனி மெயின்ரோடு. Special : அடை சுண்டல்

மாரீஸ் ரெஸ்டாரண்ட், இரத்தினமங்கலம், வண்டலுர் டூ கேளம்பாக்கம் ரோடு. Special : :ஃபுல் மீல்ஸ்

கண்ணன் ஹோட்டல், திருச்சி மத்திய பேருந்து நிலையம். Special : பாதம் பால்

தென்பனை, உளுந்தூர்பேட்டை. Special : இயற்கைமுறை குளிர்பானக் கடை

ராணி விலாஸ், செக்கானூரனி. Special : குடல் குழம்பு, குழி ஆம்லெட், ரத்த பொரியல்

வீட்டுச் சாப்பாடு, அய்யம்பேட்டை தாண்டி 15-2 கிமி, தஞ்சை – கும்பகோணம். Special : வீட்டுச் சாப்பாடு

ரோட்டு கடை, சென்னை ஓட்டேரி தாதாஷாமக்கான் பகுதி. Special : சுக்கா கபாப், வடை கபாப், வடை வறுவல்

சேகர் கடை இட்லி, மராட்டியர் அரண்மனை அருகில், தஞ்சை. Special : இட்லி

பெங்களூர் AL BAK பிரியாணி, மல்லேஸ்வரம், ராஜாஜிநகர். Special : பிரியாணி

பாலன் உணவகம், கேணிக்கரை சந்திப்பு, இராமநாதபுரம். Special : விதம் விதமான தோசை

ஹோட்டல் சுவை, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்ட். Special : இட்லி, தோசை, பொங்கல் வடை, காபி

பார்டர் கடை, செங்கோட்டை. Special : பிரைடு சிக்கன்

அய்யரக்கா கடை, செங்கோட்டை. Special : தயிர்வடை

கொங்கு மீன் ஸ்டால், திருப்பூர் காங்கயம் ரோடு. Special : மீன் வறுவல்

HBH, ஊட்டி சேரிங் கிராஸ் அருகே. Special : பிரியாணி

இதயம் பப்ஸ், திருப்பூர் PN ரோடு, மேட்டுப்பாளையம் பஸ்டாப் அருகில். Special : வெஜ் சமோசா, அரைத்து விட்ட குருமா

ரோஷன், திருச்சி-தஞ்சாவூர் ரோடு, காட்டூர். Special : தந்தூரி

டெல்லி ஸ்வீட்ஸ், கரூர். Special : சூடான சமோசா

மதுரை ஹரிஸ் மெஸ், சின்ன சொக்கிக்குளம். Special : மணக்கும் நெய் மீன் குழம்பு

ஹோட்டல் ந்யூ இம்ரான், கொடைக்கானல். Special : மட்டன் பிரியாணி

போஜனாலாயா, மகாலக்ஷ்மி ப்ளாசா, விழுப்புரம். Special : சாப்பாடு

சங்கர் சாட், அண்ணாநகர் சரவணபவன் பின்னால். Special : தஹி, பூரி மசாலா, கட்லட், சமோசா

SK சைவ-அசைவ உணவகம், பெங்களூரு விவேக் நகர். Special : சைவ அசைவ சாப்பாடு

UFM நம்ம வீட்டு சாப்பாட்டுக் கடை, பெருந்துறை. Special : கறி சோறு

அம்மாயி வீட்டு மண் பானை சமையல், கோவை ஆவாரம்பாளையம். Special : குடல்கறி, தோசை

ஹோட்டல் விருதுநகர் செட்டிநாடு உணவகம், T-நகர். Special : சாப்பாடு

ஹோட்டல் வெல்கம், நாயுடுபுரம், கொடைக்கானல். Special : பிரியாணி

கோபு ஐயங்கார் ஓட்டல், மதுரை மீனாக்ஷி கோவில். Special : தவலை வடை

ஹோட்டல் பிரபு, நாகர்கோவில். Special : அசைவம்

ஹோட்டல் விஜயதா, நாகர்கோவில். Special : அசைவம்

ஹோட்டல் அரிஸ்டோ, கொடைக்கானல். Special : டிபன், மீல்ஸ்

காலேஜ் ஹவுஸ் லாட்ஜுக்குள் இருக்கும் ரெஸ்டாரண்ட், மதுரை. Special : சைவச் சாப்பாடு

மணி ஐயர் ஓட்டல், திருச்செந்தூர். Special : சைவச் சாப்பாடு

பாரதி மெஸ், திருவல்லிக்கேணி. Special : கேப்பைக் கூழ், முளை கட்டிய தாணியங்கள்

பஞ்சு பரோட்டா, பெருந்துறை. Special : பரோட்டா, சிக்கன் பிரியாணி

மண்சட்டி சமையல், சங்ககிரி டோல்கேட் அருகே. Special : ஃபுல் மீல்ஸ்

முருகபவன், தொப்பூர். Special : விதம் விதமான தோசை

தாஜ் ஹோட்டல், மதுரை-ராமேஸ்வரம் மெயின் ரோடு, பரமக்குடி. Special : கறிக்கஞ்சி

ஏஒன்மெஸ், கோவில்பட்டி. Special : சிக்கன் பிரியாணி, லாலிபாப், தலைக்கறி

பசுமை உணவகம், சேலையூர். Special : கருப்பட்டி காஃபி

NEW MADRAS CAFÉ, சந்தோம். Special : மாலையில் சம்சா, சாஸ்

கருப்பையா நாடார் மெஸ், சாத்தூர். Special : கரண்டி ஆம்லெட், டிங் டாங்

துளசி பிரியாணி, திண்டுக்கல். Special : நாட்டுகோழி பிரியாணி, புட்டு பரோட்டா

பார்த்தசாரதி விலாஸ், திருச்சி திருவானைக்கோவில். Special : நெய் தோசை

விஞ்சை விலாஸ், நெல்லை டவுனில் ஆர்ச் பக்கம். Special : விதம் விதமான தோசை

வெங்கடேச பவன், ஸ்ரீரங்கம் கோயில் அருகில். Special : சாம்பார் வடை, கீரை வடை

மூர்த்தி கபே, சிதம்பரம். Special : கடாய் சிக்கன்:

ஆண்டவர் அல்வா கடை, திருவையாறு. Special : அல்வா

சீனிவாசன் தங்கப்பாண்டியன் கடை, கீழஈரால். Special : சேவு, சீனிக் கருப்பட்டி மீட்டாய்

மங்கள விலாஸ், சேலம். Special : மட்டன் சுக்கா

விவேகானந்தா, சேலம். Special : நாட்டு கோழி நெஞ்சு பிரை, முட்டைதோசை

செல்வி மெஸ், சேலம். Special : கட்லா மீன் பிரை, மட்டன் பிரியாணி

சேலம் RR பிரியாணி, சென்னை மதுர வாயல், சென்னை. Special : பிரியாணி

பராசக்தி நாட்டு கோழி பிரியாணி, சேலம் செவ்வாய்ப்பேட்டை. Special : நாட்டுக் கோழி பிரியாணி, வெங்காய சில்லி சிக்கன்

புத்தூர் ஜெயராமன் கடை, சீர்காழி. Special : அசைவ உணவு, கெட்டித் தயிர், இறால், சிக்கன்

புத்தூர் ஜெயராமன் கடை, சிதம்பரம். Special : அசைவ உணவு

ஹோம் இட்லி கடை, ஈரோடு collector ஆபீஸ் அருகே. Special : ரவா இட்லி, விதம் விதமான தோசை

சின்னப் பையன் கடை, சேலம் குகை. Special : மட்டன் வறுவல், ஈரல் ஃப்ரை

கந்தவிலாஸ் பரோட்டா, சேலம் குகை. Special : சூடான பரோட்டா, கோழிக்குழம்பு

பாவா கடை, அரிசிபாளையம். Special : விதம் விதமான தோசை

வெங்கடேஷ்வரா லாலா ஸ்வீட் ஸ்டால், ஶ்ரீவில்லிபுத்தூர். Special : பால்கோவா

தொட்டிபட்டியார் ஹோட்டல், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே. Special : பெஸ்ட் சிக்கன், மிளகு கிரேவி

சந்திரன் மெஸ், மதுரை தல்லாகுளம். Special : அயிரைமீன் குழம்பு, நெய்மீன் வறுவல்

மயிலை கற்பகாம்பாள் மெஸ், மைலாப்பூர். Special : விதம் விதமான தோசை

சுல்தான் பிரியாணி, சங்கரன்கோயில், கழுகுமலை ரோட்டில். Special : பிரியாணி

கரீம் மெஸ் பிரியாணி, சென்னை பெரியமேடு. Special : பிரியாணி

பாட்ஷா பிரியாணி சென்டர், சத்திரம், திருச்சி. Special : பிரியாணி

முத்துப்பிள்ளை கேண்டின், புதுக்கோட்டை. Special : முட்டைமாஸ் பரோட்டா

குமார் மெஸ், மதுரை தல்லாகுளம். Special : விரால்மீன் வறுவல், அயிரை மீன்

அரசன் மெஸ் மண்பானை சமையல், நெல்லை மதுரை பைபாஸ் சாலை. Special : அன் லிமிட்டட் சாப்பாடு:

சுகுணா விலாஸ், திருசெங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே. Special : முயல் ரோஸ்ட்

ஹோட்டல் ட்ராபிக் ஜாம், திருச்சி மலைக்கோட்டை, பரோட்டா, மூனு வித க்ரேவி

பார்த்தசாரதி தோசை, திருச்சி திருவானைக்கோவில். Special : நெய்தோசை, விதம் விதமான தோசை

ஸ்டார் பிரியாணி, வாலாஜா டோல்கேட், ஆற்காடு. Special : பிரியாணி மற்றும் கெளசியா பிரியாணி அண்ணா சிலை அருகில் ஆற்காடு

டெல்லி வாலா, மேலக் கோபுர வாசல், மதுரை. Special : சப்பாத்தி, பூரி, இனிப்பு, கார வகைகள்

மித்தாய் மந்திர் ஹோட்டல், வட பழனி முருகன் கோவில், சென்னை. Special : சைவ உணவு

மோகன் போஜனாலயா, தெற்காவணி மூல வீதி, மதுரை. Special : உணவு வகைகள்

காந்திராம்ஸ் ஹோட்டல், உடுமலைபேட்டை. Special : தயிர் வடை, சாம்பார் வடை

செந்தில் ஹோட்டல், உடுமலைபேட்டை. Special : மஷ்ரூம் fry, மஸ்ரூம் க்ரேவி, முட்டை பரோட்டா

இம்பாலா ஹோட்டல், திருச்சி. Special : பிரியாணி

புகாரி, திருச்சி. Special : பிரியாணி

குறிஞ்சி ஹோட்டல், திருச்சி. Special : எள் மிளகாய்ப்பொடி, பூண்டு மிளகாய்ப்பொடி,

கிராண்ட் ஹோட்டல், திருச்சி. Special : பிரியாணி

கொளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. Special : பிரியாணி

இனாம்குளத்தூர் பிரியாணி கடை, திருச்சி. Special : பிரியாணி

அரிஸ்டோ ஹோட்டல், திருச்சி. Special : கைமா சமோசா

ஆர்ய பவன், கிருஷ்ணகிரி. Special : பாதுஷா, பால்கோவா

கதிரவன் மெஸ், தேரடி, ஸ்ரீவில்லிப்புத்தூர். Special : சைவ சாப்பாடு

ரகுமானியா ஹோட்டல், விருத்தாசலம். Special : வான் கோழி பிரியாணி

அர்ச்சனா ஹோட்டல், விருத்தாசலம். Special : சைவச் சாப்பாடு

ஹோட்டல் சற்குரு, புதுச்சேரி. Special : சைவ உணவு

ஹோட்டல் ஸ்ரீகாமாட்சி, E.C.R. இந்திரா காந்தி சிலை, புதுச்சேரி. Special : அசைவம், மதிய உணவு

ஹோட்டல் மனோ, சக்ரவர்த்தி தியேட்டர், நாகர்கோவில். Special : கொத்து பரோட்டா

லின்ஸ் ஹோட்டல், நாகர்கோவில். Special : கொத்து பரோட்டா

நொண்டிக்கடை, கன்னியாகுமரி. Special : மீன் குழம்பு

ஹோட்டல் நாசர், மார்த்தாண்டம். Special : சிக்கன் ஃப்ரை

ஹோட்டல் ஜூப்ளி, வடசேரி, நாகர்கோவில். Special : கொத்துக் கோழி

கிருஷ்ணா விலாஸ், காஞ்சிபுரம். Special : சாம்பார் இட்லி, விதம் விதமான தோசை

ராயல் ஹோட்டல், அபிராமி தியேட்டர் எதிரில், ஈரோடு. Special : எண்ணையில் பொரித்த புரோட்டா

கண்ணதாசன் மெஸ், தி-நகர் நடேசன் பார்க், சென்னை. Special : கொத்து பரோட்டா

சந்திரன் மெஸ், தல்லாகுளம். Special : நெய்மீன் வறுவல், அயிரைமீன் குழம்பு

குமார் மெஸ், தல்லாகுளம். Special : அயிரை மீன் குழம்பு, விரால்மீன் வறுவல்

அம்மா மெஸ், தல்லாகுளம். Special : நண்டு ஆம்லெட், நெய்மீன் வறுவல், மட்டன் கோலா

அன்பகம் மெஸ், வடக்குவெளி வீதி. Special : மட்டன் சுக்கா, கரண்டி ஆம்லேட்

அருளானந்தர் மெஸ், விளக்குத்தூண். Special : நெய்மீன் வறுவல், இறால்மீன் வறுவல்

அம்சவல்லி ஹோட்டல், கீழவாசல். Special : மட்டன் பிரியாணி

பனமரத்து பிரியாணி கடை, தல்லாகுளம். Special : புலாவ் போன்ற பிரியாணி

சரஸ்வதி மெஸ், பெரியார் சிலை அருகில், தல்லாகுளம். Special : மட்டன் பிரியாணி

ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப், தல்லாகுளம். Special : மீன் சாப்பாடு

திண்டுக்கல் வேலு பிரியாணி, தல்லாகுளம். Special : மட்டன் பிரியாணி

கோனார் மெஸ், சிம்மக்கல். Special : கறி தோசை, வெங்காய சட்னி, விதம் விதமான தோசை

குமார் மெஸ், தல்லாகுளம், மாட்டுத்தாவணி. Special : இட்லி, முட்டை வழியல்

ஆறுமுகம் பரோட்டா கடை, தல்லாகுளம். Special : பரோட்டா, சுவரொட்டி குடல் வறுவல்

அஜ்மீர் மஹால், கோரிப்பாளையம். Special : முட்டை பரோட்டா

சிங்கம் பரோட்டா கடை, பீபீ குளம். Special : முழுக்கோழி வறுவல்

ஜானகிராமன் ஹோட்டல், திலகர் திடல். Special : மட்டன் சுக்கா

சுதா பை நைட், ரிசர்வ் லைன். Special : முட்டை பரோட்டா

கிங் பரோட்டா, டாஜ், டவுன்ஹால் ரோடு, கோவை. Special : பட்டர் சிக்கன்

பஞ்சாபி தாபா, தல்லாகுளம். Special : பட்டர் நான், தந்தூரி சிக்கன்.

பரோட்டா கடை, ஆவின் சிக்னல், மதுரை. Special : பரோட்டா

ஆர்ய பவன், மதுரை. மசாலா பால், லஸ்ஸி (இரவு)

அம்ஸவல்லி, மதுரை. Special : பிரியாணி, ஆப்பிள் பால்

ஜாஃபர் ஹோட்டல், மதுரை. Special : பிரியாணி

ஹோட்டல் தமிழ்நாடு, காமராஜர் சாலை, மதுரை. Special : கொத்து புரோட்டா

ஹோட்டல் அருளனாந்தம், மதுரை. Special : மட்டன் சுக்கா, அயிரை மீன்

ஓல்ட் மார்டன் ரெஸ்டாரன்ட், மதுரை. Special : இட்லி

ஸன்கு வாலா, மதுரை. Special : ரொட்டி, மாம்பழ ஜூஸ்

குமார் மெஸ், மதுரை. Special : போன் லெஸ் நண்டு

கோபு ஐயங்கார் ஹோட்டல், மதுரை. Special : வெள்ளை ஆப்பம், காரத் துவையல்

வின்சென்ட் பேக்கரி, மேற்கு மாசி வீதி, மதுரை. Special : இஞ்சி பிஸ்கட்

முதலியார் கடை, கோரிப்பாளையம், மதுரை. Special : இட்லி, காரச் சட்னி

குரு பிரசாத் ஹோட்டல், மதுரை. Special : சில்லி பரோட்டா

கணேஷ் மெஸ், மதுரை. Special : சோயா குழம்பு

புதூர் மீனாக்ஷி பவன், மதுரை. Special : வறுத்த சிக்கன் லெக் பீஸ்

ஹோட்டல் அபிராமி, சிம்மக்கல், மதுரை. Special : பூரி, கிழங்கு மசாலா

ஸ்ரீ ராம் மெஸ், மதுரை. Special : அன் லிமிட்ட் மீல்ஸ்

போஸ் கடை, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. Special : இட்லி, விதம் விதமான தோசை

கணேஷ் மெஸ், மேலப்பெருமாள் மேஸ்திரி ரோடு, மதுரை. Special : புல் மீல்ஸ்

மாடர்ன் ரெஸ்டாரென்ட், மதுரை. Special : தோசை, வட இந்திய உணவு வகைகள்

சபரீஸ், டவுன்ஹால் ரோடு, மதுரை. Special : நெய்ப் பொங்கல், அல்வா, விதம் விதமான தோசை

முருகன் இட்லி கடை, இம்மையில் நன்மை தருவார் கோயில் அருகில், மதுரை. Special : இட்லி, விதம் விதமான தோசை

லக்ஷ்மி விலாஸ் லாலா மிட்டாய் கடை, திருநெல்வேலி. Special : அல்வா

சங்கர் காபி, அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை. Special : உழுந்து வடை

ஐயப்பா தோசை கடை, பாண்டிய வெள்ளாளர் தெரு, மதுரை. Special : விதம் விதமான தோசை

விசாலம் காபி, தல்லாகுளம், மதுரை. Special : காபி

இளநீர் சர்பத், மதுரா கோட்ஸ் மேம்பாலம் கீழே, மதுரை. Special : இளநீர் சர்பத்

பேமஸ் ஜிகர்தண்டா, விளக்குத்தூண், மதுரை. Special : ஜில்ஜில் ஜிகர்தண்டா

PNR சர்பத்கடை, பழனி. Special : சர்பத்

செட்டியார் டீக்கடை, திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகில். Special : உளுந்தவடை, தேங்காய் சட்னி

வில்லெஜ் விருந்து, பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம். Special : பன், பரோட்டா

சூரியா ஹோட்டல், NGM கல்லூரி அருகில், பொள்ளாச்சி. Special : கொழுக்கட்டை

அமுதசுரபி, பொள்ளாச்சி. Special : விதம் விதமான தோசை

கௌரி கிருஷ்ணா, பொள்ளாச்சி. Special : மினி காஃபி.

பிரியாணி ஹவுஸ், பொள்ளாச்சி. Special : சிக்கன் பிரியாணி

நாட்டு கோட்டை செட்டி நாடு ஹோட்டல், இராமநாதபுரம். Special : மட்டன் பிரியாணி

பாலாஜி பவன், யூனியன் க்ளப், திண்டுக்கல். Special : பிடி கொழுக்கட்டை

பாலாஜி ஸ்நாக்ஸ், பாரதிநகர் பஸ் ஸ்டாப், இராமநாதபுரம். Special : டீ, ஸ்நாக்ஸ்

ஹோட்டல் மரண விலாஸ், தெப்பக்குளம், மதுரை. Special : அன்லிமிடெட் குஸ்கா 20 ரூபாய்

ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோவை கலெக்டர் ஆபிஸ் ரோடு. Special : அன்லிமிட் சாப்பாடு

கணேஷ் செட்டிநாடு ஹோட்டல், ராயப்பேட்டை, சென்னை. Special : அன்லிமிட் சாப்பாடு

கீதா ஹால், கோவை. Special : நீர் தோசை

அப்பா மெஸ் அல்லது டவுசர் ஹோட்டல், மந்தைவெளி பஸ் ஸ்டான்ட், மந்தைவெளி. Special : இறால் தொக்கும், வஞ்சிரம் மீன் வருவலும் மட்டன் குழம்போடு

தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி. காசி வினாயகா மெஸ். Special : பருப்பு நெய், நெய் ஸ்பெஷல், பைனாப்பிள் ரசம், பருப்பு சாம்பார், பருப்பு பொடி

ரமேஷ் மெஸ், அழகேசன் சாலை, சாய்பாபா காலனி, கோவை. Special : ஆப்பம், தேங்காய் சட்னி

வள்ளி மெஸ், நெசவாளர் காலனி மெயின் ரோடு, தர்மபுரி. Special : கல்லில் போட்டு புரட்டி எடுக்கப்பட்ட நன்கு வெந்த மட்டன், சிக்கன், மீன், முட்டை சட்டினி

பழநியப்பா மெஸ், புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அருகில். Special : இறால், மீன், கோழி, காடை

சிவசாய் மெஸ், நாரதகான சபாவுக்கு எதிரே, டிடிகே சாலை, சென்னை. Special : சைவ உணவு.

தாபா எக்ஸ்பிரஸி, செனடாஃப் சாலை, சென்னை. Special : பஞ்சாபி மதிய உணவு

அம்சவல்லி பவன், கீழவெளி வீதி, மதுரை. Special : மட்டன் பிரியாணி

ஸ்ரீராம் மெஸ், காக்கா தோப்பு, மதுரை. Special : சைவம்

ஹரிவிலாஸ், மேலமாசி வீதி, மதுரை. Special : கத்திரிக்காய் பஜ்ஜி, புளியோதரை, கேசரி, காரவடை

ஒரிஜினல் நாகப் பட்டினம் நெய் மிட்டாய்க் கடை, மதுரை. Special : நெய் வழியும் அல்வா

பாம்பே அல்வா ஸ்டால், கீழ ஆவணி மூல வீதி, மதுரை. Special : நெய்யில் மிதக்கும் சூடான அல்வா

அன்னபூரணி பொங்கல் கடை, முனிச்சாலை நாற்சந்தி, மதுரை. Special : புளியோதரை, கொண்டைக் கடலை சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல்

சாரதா மெஸ், பெல்ஸ் சாலையில் இருந்து அண்ணா சாலை, திருவல்லிக்கேணி. Special : மதுரை அயிரை மீன் குழம்பு

அம்பாள் மெஸ், திருவல்லிக்கேணி. Special : ஸ்பெஷல் மசாலா தோசை

பெஸ்ட் கிருஷ்ண பவன், திருமலை நாயக்கர் மகாலின் எதிரே, மதுரை. Special : இட்லி, -பொங்கல், தோசை

குப்பைமேனியின் அதிசயம்

இயற்கையின் அதிசயம்
‘‘எளிதில் கிடைக்கும் எந்த ஒரு பொருளும் மதிக்கப்படுவதில்லை. அதன் மதிப்பு தெரிவதுமில்லை. அப்படி மிகமிக சாதாரணமான ஒரு செடியாக காட்சி தரும் குப்பைமேனிக்குள் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
சாலையோரங்களிலும், குப்பை மேடுகளிலும் முளைத்துக்கிடக்கும் இதன் பலன் தெரிந்தால் வியந்துபோவோம்’’ என்கிற சித்த மருத்துவர் மாலதி, அதன் நற்பலன்களை நமக்கு விளக்குகிறார்.
குப்பையாக அல்லது குப்பைகளின் தேக்கத்தினால் கேடடைந்துள்ள மேனி என்ற உடலினை, நோய் நீக்கம் செய்து பாதுகாத்திடும் செடி என்ற பொருளிலும் குப்பை மேனி என்று பொருள் கொள்ளலாம்.
குப்பைமேனியின் தாவரவியல் பெயர் Acalypha Indica Linn. அரிமஞ்சரி, பூனைவணங்கி (குப்பைமேனியின் செடியினை வேறுடன் பிடுங்கி பூனையின் முன்பு வைத்தால் பூனை பயந்து அங்கேயே அமர்ந்துவிடும்) என்ற வேறு பெயர்களிலும் குப்பைமேனி அழைக்கப்படுகிறது.
இதன்சுவை கசப்பு மற்றும் கார்ப்பு. இது வெப்ப வீரியமாக உடலில் செயல்படும். இதன் செய்கைகள் வலிநீக்கி, புழுக்கொல்லி, பெருமலம்போக்கி, சிறுநீர்ப்பெருக்கி, வாந்தியுண்டாக்கி, கோழையகற்றி, சூதகமுண்டாக்கி.
இதன் செய்கைகள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை இலகுவாக வெளியேற்றும் பண்பு கொண்டிருப்பதைக் காணலாம். இச்செடியின் இலைகள், வேர், வேர்பட்டை, சமூலம் (முழுச் செடி) என அனைத்து பகுதிகளும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இதன் இலையை நான்கு கைப்பிடி அளவுடன் 800 மிலி நீருடன் சேர்த்து சிறுதீயில் காய்ச்சி 100 மிலி ஆக வற்றச் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கழிச்சல் ஏற்பட்டு வயிற்றில் நீண்ட நாட்களாக தங்கியுள்ள புழுக்கள் மலத்துடன் இலகுவாக வெளியேறும்.
இலையை 4 மடங்கு நீருடன் சேர்த்து பாதியாக காய்ச்சி வடிகட்டிய நீரினைக் கொண்டு நாட்பட்ட ஆறாத புண்களை கழுவிட அதனில் உள்ள அழுகிய திசுக்கள் நீக்கப்பட்டு (குப்பை மேனி தழையால் செய்யப்படும் மத்தன் தைலம் பயன்படுத்திட) புண்கள் எளிதில் ஆறும்.
இலைச்சாறு குழந்தைகளுக்கு 5 மில்லி முதல் 10 மில்லி வரையிலும் பெரியவர்களுக்கு 15 மில்லி முதல் 20 மில்லி அளவு வரை காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க கழிச்சல் உண்டாகி குடலில் தங்கியுள்ள புழுக்கள் மற்றும் கபம் வெளியாகும். இதனால் மலக்கட்டு, கிருமி நோய்கள், மந்தம், செரியாமை, தேமல், படை, அரிப்பு போன்ற தோல் நோய்கள் நீங்கி உண்ட உணவின் சத்துக்கள் உடலினை வன்மை பெற செய்யும்.
இலைச்சாற்றினை குழந்தைகளுக்கு 15 மில்லி முதல் 20 மில்லி பெரியவர்களுக்கு 25 மில்லி முதல் 30 மில்லி வரை காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வாந்தியுண்டாகி பித்தம் தணிவதுடன் செரியாமை கோழைக்கட்டு, மந்தம், புளித்த ஏப்பம், சுவையின்மை உணவில் விருப்பமின்மை முதலிய பிரச்னைகள் நீங்கும். இலைச்சாற்றினை சிறு தீயில் சுண்டக்காய்ச்சி மெழுகுப்பதத்தில் எடுத்து 130 முதல் 280 மில்லி கிராம் அளவு இருவேளை உள்ளுக்குத் தர குழந்தைகளின் இருமல் நீங்கும்.
இலைச்சாறுடன் தேன் சேர்த்து குழைத்து பற்றுப்போட தொண்டைவலி, வீக்கம், குரல் கம்மல் குணம் உண்டாகும்.இலைச்சாறுடன் கற்சுண்ணாம்புச் சேர்த்து குழைத்துத் தலைவலி, மூக்கடைப்பு, சைனஸ், வீக்கம் உள்ள இடத்தில் வெளியில் பற்றுப்போட விரைவில் குணமாகும்.
சிறிய குழந்தைகள்(2-3 வயது) தொண்டையில், மார்பினில் சளிகட்டிக் கொண்டிருக்கும்போது அதனை துப்பத் தெரியாமல் சுவாசப்பாதையில் அடைத்துக் கொள்ளும். அதனால் மூச்சுத்திணறல், மார்புவலி என வேதனை உண்டாக்கும். அப்போது, இலைச்சாறுடன் சம அளவு வேப்ப எண்ணெய் கலந்து அதனை விரலால் எடுத்து தொண்டையில் அல்லது உள்நாக்கில் தடவிட தொண்டையில், மார்பில் வயிற்றில் கட்டியிருக்கும் கோழை வாந்தியுடன் வெளியேறி சுகம் உண்டாகும்.
இலைச்சாற்றுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி காதுவலிக்கு காதில் சில சொட்டுக்கள் விட்டும், காதின் வெளியிலும் தடவி வர குணம் உண்டாகும். காதுவலி, காதெழுச்சி, காதடைப்பு, காதுமந்தம் இவற்றிற்கு ஒரு கைப்பிடி இலையுடன் சிறிது கல்லுப்பு சேர்த்து உள்ளங்கையில் வைத்து கசக்கிச் சாறு பிழிந்து இதனுடன் சிறிது கற்சுண்ணாம்பு சேர்த்து குழைத்து அதனை காதினைச் சுற்றி வெளியில் பற்றுப்போட நிவாரணம் கிடைக்கும்.
தொண்டையில் வெளி பக்கமாக அந்தப் பற்றினைப்போட தொண்டைவலி, வீக்கம், குரல் கம்மல் குணமாகும்.விசப்பூச்சிகள் கடித்த வீக்கம், கடிவாய்வலி அவ்விடங்களில் பற்றுப்போட விரைவில் குணமாகும். கட்டிகளின் மீது பற்றுப்போட கட்டிகள் விரைவில் பழுத்து உடைந்து சீழ் வெளியாகி விரைந்து நலம் பெறலாம்.
மது போன்ற போதைப்பொருட்கள் அதிக அளவில் நீண்ட நாட்களாக எடுத்துக்கொண்டதால் ஏற்பட்ட குடிவெறி மயக்கம் இருப்பவருக்கு, குப்பைமேனி இலையுடன் ஒருகல் கல்லுப்புச் சேர்த்து கசக்கினால் வரும் சாற்றினை காலையில் மட்டும் இரு நாசித் துளைகளிலும் 3 முதல் 5 துளிகள் வரை விட்டு 45 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் ஒரு மண்டலம் தலை முழுகல் செய்து வர குடி வெறிநோய் நீங்கும்.
ஒரு கைப்பிடி இலையுடன் ஒரு பல் பூண்டு சேர்த்து மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க மலத்துடன் வயிற்றுப்புழுக்கள் வெளியேறும். இவ்வாறு தொடர்ச்சியாக 10 நாட்கள் அல்லது வாரத்தில் இரு நாட்கள் என ஒரு மாதம் செய்ய குழந்தைகளில் குணப்படுத்த இயலாத தோல்நோய்கள், நாட்பட்ட தேமல், வெண்படை, கரப்பான் மற்றும் சிரங்கு குணமாகும்.
இலையை தனியாகவோ அல்லது எட்டில் ஒரு பங்கு விரலி மஞ்சள்தூள் சேர்த்தோ அரைத்து 5 மில்லிகிராம் குழந்தைகளுக்கும், 15 மில்லிகிராம் பெரியவர்களுக்கும் காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க உடனே வாந்தி ஏற்பட்டு பித்தம் தணியும். செரியாமை, வயிற்று உப்புசம், மாந்தம் மந்தம் ஆகியவை குணமாகும். இதனை ஆசனவாய் வழியாக உட்செலுத்த நாட்பட்ட மலக்கட்டு நீங்கும்.
இலையை மட்டும் நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் இரவில் இளஞ்சூடான பாலில் 5 மில்லிகிராம் அளவு கொடுத்து வர வயிற்று புழுக்கள் அனைத்தும் மலத்தில் வெளியாகி 10 நாட்களில் கிருமிகளால் ஏற்பட்ட தோல்நோய்கள், ஒவ்வாமை, சுவையின்மை, ரத்தசோகை முதலியன குணமாகும்.
இலைப்பொடியினை உடல் வன்மைக்கு ஏற்றபடி ஒரு மில்லி கிராம் முதல் ஒன்றரை மில்லி கிராம் அளவு வரை தேனில் குழைத்துக் கொடுக்க இருமல், ஈளை, இரைப்பு முதலிய சுவாச உறுப்புகளின் பிரச்னைகளில் நல்ல குணம் உண்டாகும்.
சற்று கொரகொரப்பான பொடியினை கறி நெருப்பினில் இட்டு உண்டாகும் புகையினை நாட்பட்ட அழுகிய புழு வைத்த ஆறாத புண்களில் புகையைக் காட்டினால் புழுக்கள் வெளியேறி அழுகிய சிதைந்த திசுக்கள் நீங்கி விரைவில் குணம் கிடைக்கும். சைனஸ் மூக்கடைப்பு தலைவலி முதலியவற்றில் நல்ல நிவாரணம் ஏற்படும்.
குப்பைமேனியை கலவைக் கீரைகளில் ஒரு பகுதியாக சேர்த்து சமைத்து உண்ணும் பழக்கம் இன்றும் நமது தமிழகக் கிராமங்களில் உள்ளது. கலவைக் கீரையை கர்ப்பிணிப் பெண்கள் வாரம் ஒருநாள் பருப்புடன் சமைத்து உண்பதால் சுகப்பிரசவம் ஏற்பட ஏதுவாக அமைகிறது.
இன்றும் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகளில் நமது சித்த மருத்துவர்கள் ஆறு மாதத்திற்குப் பின்பு, வாரம் ஒருநாள் கலவைக்கீரையை பருப்புடன் சேர்த்து வேக வைத்து கடைந்து உண்ணுதலை கட்டாயமாக அறிவுறுத்துகிறார்கள். கீரையாக சமைத்து உண்டு வர உணர்வு மற்றும் இயக்க நரம்புகளின் சீர்கேடுகள் நீங்கி உடலியங்கில் வன்மையாகும்.
குப்பைமேனி இலைகளை விளக்கெண்ணெய் சேர்த்து மண்சட்டியில் இட்டு வதக்கி ஒரு மண்டலம் பத்தியமாக உண்ண, உடல் நரை திரை நீங்கி இளமையாக, அழகுடனும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் வன்மையாக வாழலாம். இதன் இலைப்பொடியினை பல் ஈறுநோய்களில் பற்பொடியுடன் பயன்படுத்தலாம்.
ஈறுகள் வன்மை பெற இலைப்பொடியினை கலந்த குடிநீரால் வாய் கொப்பளிக்கலாம். வாய்நாற்றம் பற்சொத்தையில் புகையை பல் ஈறுகளில் படும்படி செய்தால் விரைவில் குணம் கிடைக்கும்.இலையின் பொதுக் குணப்பயன்களை பின்வரும் பாடலால் அறியலாம்.
‘தந்த மூலப்பிணி தீத்தந்திடு புண்சர்வ விடம்
உந்து குன்மம் வாதம் உதிரமூலந்தினவு
சூலஞ் சுவாசம் தொடர்பீநிசங் கபம்போம்
ஞாலங்கொள் மேனியதனால்.’
– தேரையர் குணவாகடம்.
குப்பை மேனியின் வேர்வேரினை எட்டு மடங்கு நீர் சேர்த்து எட்டில் ஒன்றாக காய்ச்சி வடித்து உள்ளுக்கு கொடுக்கக் கழிச்சல் ஏற்படும்.
வேரை நன்றாக மைய அரைத்து 5 மில்லிகிராம் அளவு நீரில் கலந்து உட்கொள்ள எலி கடித்த விஷம் நீங்கும். ஆனால் வாந்தியும் கழிச்சலும் உண்டாகும். வேரினைக் கொண்டு வேப்பங்குச்சியைப் போல் பல்துலக்கி வரலாம். பற்கள் உறுதியாகும். ஈறுகள் வலிமையாகும்.
இதன் சமூலத்தை இடித்துச் சாறு எடுத்து இலைச்சாற்றை அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தலாம். சமூலத்தினை நிழலுர்த்தி சூரணம் செய்து பற்பொடிகளில் சேர்த்து பயன்படுத்த பல்நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
சமூலத்தினை எரித்து சாம்பலாக்கி அதனை பற்பொடியுடன் சேர்த்து பயன்படுத்த பொது குணப் பாடலில் உள்ள அனைத்து நற்பலன்களும் உண்டாகும். நாயுரு, வி மரப்பட்டை, அரசம்பட்டை, ஆலம் விழுது சேர்ந்த பல்பொடியில் குப்பைமேனி சமூலம் முக்கிய
இடம்பெறுகிறது.
இவைகளில் செயல்முறை இடர்பாடுகள் உண்டெனக் கருதுபவர்கள் குப்பைமேனியை கொண்டு செய்யும் மேனித் தைலம் மருந்துக்கடைகளில் கிடைக்கிறது. அதனை பயன்படுத்தலாம். அதனை சித்த மருத்துவர்களின் ஆலோசனையின்படி சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
சிறு குழந்தைகள் இதயநோய் உள்ளவர்கள், உடல் மெலிந்தோர், வயிற்றுப்புண், தொண்டை மற்றும் குடல்புண் உள்ளோர், ரத்த அழுத்தம், வேறு நோய்களுக்கு நீண்ட நாட்களாய் மருந்து உட்கொள்வோர் சித்த மருத்துவரின் நேரடி ஆலோசனையின்படியே குப்பைமேனியை உட்கொள்வது நல்லது.

கேலாங்க் – 1

என்னப்பா படிச்சிருக்க??

நான், ” இஞ்சினியரிங் படிச்சிருக்கேன் னா”

சிங்கப்பூர்க்கு இது தான் 1st timea??

ஆமாங்கனா..

விசிட்டிங் விசாவா? இல்லா பெர்மிட் விசாவா??

விசிட்டிங் விசாதான்.. ஆனா இங்க வேலை தேடனும்…

இங்க யாரயாது தெரியுமாபா? எப்படி வேலை தேடுவ??

யாரையும் தெரியாது ஆனால் வேலை தேடனும்னா..

இப்படி தான் என் சிங்கப்பூர் வாழ்க்கை ஆரம்பித்தது ஒரு சிறிய அறையில்..

ஆமாங்க நான் தமிழ் நாட்டில் கலைஞர் பிறந்த ஊரான திருவாரூரில் பிறந்து வளர்ந்தவன்..

படித்தது என்னவோ இஞ்சினியரிங் தான் ஆனால் வேலை தான் கிடைக்கவே இல்லை.. வேலைத்தேடி சென்னையில் ஏறாத கம்பெனி இல்ல. நடக்காத தெருவும் இல்ல.. இஞ்சினியரிங் படிச்சவன தவிர எல்லோரும் அவன் அவன் படிச்சதுக்கு ஏற்ற வேலைய தான் பாக்குறான்..

ஆனால் இஞ்சினியரிங் படிச்சவன் மட்டும் தான் எந்த வேலை கொடுத்தாலும் பாக்குறான்..

அப்படி தான் நானும் தாம்பரத்துல எலக்ட்ரானிக் தராசு sales and service பன்ற கம்பெனில (சாரி கடைல) வேலைக்கு சேர்ந்தேன்..

ஆனால் இதவிட பெரிய கொடுமை என்னனா.. இந்த கடைல சேர்ரதுக்கு கன்சல்டன்சி மூலமா வந்தேன். இதுல அவனுக்கு வேற ரூ.5000 பீஸ்..

இது பின்னாலதான தெரியும் கம்பெனி இல்ல கடைனு.. நானும் ஏதோ வாழ்க்கைல சாதிக்க முடியாதத சாதிச்ச மாதிரி கன்சல்டன்சில கொடுத்த லட்டர் எடுத்திட்டு கம்பெனிக்கு போனேன்..

ஷட்டர் போட்ட ஒரு சின்ன கடை. ஒருத்தர் வயர் பின்னல் போட்ட சேரில் உட்கார்ந்து இருந்தார்..

நான், “ஹலோ சார். மே ஐ கம் இன்? ”

சேரில் உட்கார்ந்து இருந்தவர், “எஸ் உள்ள வாங்க..”

கன்சல்டன்சில இருந்து லட்டர் குடுத்தாங்க. இந்த கம்பெனில ஜாய்ன் பன்றதுக்கு..

ஒகே லட்டர கொடுங்க.. ஆமா உங்க பேர் என்ன??

எஸ் மை நேம் இஸ் ஆதித்யன்.

ஒகே ஆதி, உங்களோட சம்பளம் ரூ.5000. ஓகே தான உங்களுக்கு??

எஸ் சார் ஓகே.

நெக்ஸ்ட் வீக்ல இருந்து சர்வீஸ்க்கு ஆனந்த் கூட போங்க. இந்த வாரம் நான் உங்கள கூட்டிட்டு போறேன்.

அப்பறம் ஆனந்த் இங்க வாங்க..

ஆனந்த், “சொல்லுங்க சார்..”

அடுத்த வாரம் இவர, ஆமா உங்க பேர் என்னா சொன்னிங்க??

நான், ” ஆதித்யா சார். ”

ம்ம் ஒகே ஆதித்யாவ அடுத்த வாரத்துல இருந்து நீங்க சர்வீஸ்க்கு கூட்டிட்டு போங்க.. அப்றம் அவருக்கு மன்த்லி பஸ் பாஸ் எடுத்து கொடுத்திருங்க..

ஆனந்த், ” ம் ஒகே சார்..”

சரி ஆதி வாங்க நாம போகலாம்.. ஆதினு கூப்பிடலாம்ல???

ம்ம் கூப்பிடலாம் சார்..

ஆமாம் நீங்க எந்த ஊரு??

திருவாரூர் சார்.

பேசிக்கொண்டே இருவரும் படிக்கட்டில் இறங்கி கீழே அவரோட பைக் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்தோம்..

சார் உங்க பேர நான் தெரிஞ்சுக்கலாமா??

ஓ சாரி பா மறந்துட்டேன் நானே சொல்லிருக்கனும்.. ஒகே என் பேர் ராமகிருஷ்ணன் பட் எல்லோரும் ராம்னு கூப்பிடுவாங்க..

ஒகே சார்..

ராம் சார் இதுக்கு இடைல வண்டிய ஸ்டார்ட் பண்ணி என்னை ஏற்றிக்கொண்டு கிளம்பினார்..

ராம் சார், “தம்பி இப்போ 1st நம்ப கேளம்பாக்கத்துக்கு போகனும். அங்க 2, 3 கஸ்டமர பாக்கனும். ஆர்டர் தரேன்னு சொல்லிருக்காங்க.”

நான், “ம்ம் ஒகே சார்”.

அவர் சொல்றது எல்லாத்துக்கும் ம் கொட்டிகிட்டே போனேன்..

முதல்ல ஒரு கறிகடைல வண்டிய நிப்பாட்டினார்..

அங்கபோய்,

“பாய் தராசு வேல செய்தா இப்போ??” என்றார் ராம் சார்.

வாங்க சார் உங்களதான் நினச்சிட்டே இருந்தேன் நல்ல வேல நீங்களே வந்துட்டீங்க..

ஏன் என்னா ஆச்சு பாய்??

இன்னொரு தராசு சர்வீஸ் பண்ணீங்கள்ள..

ஆமாம்..

அதுல டிஸ்ப்ளேஒலுங்கா வேல செய்ய மாட்டேங்குது..கொஞ்சம் என்னானு பாறுங்க..

அதான் நான் ஏற்கனவே சொன்னேன்ல பாய் அது இவ்ளோ நாள் உழச்சதே பெரிய விஷயம்.. இப்போ புது மாடல் தராசு இருக்கு இந்த கேட்லாக்க பாருங்க.. எல்லாமே 15 கிலோ எடை உள்ளது..ரேட் பேசிக்கலாம் ஒன்னும் பிரச்சினை இல்ல..

சரிங்க சார் என் பையன் வரட்டும் பாத்து வைக்கிறேன்.. நாளைக்கு வருவீங்கள்ள??

ம்ம் வருவேன் பாய்..ஓகே நான் கிளம்புறேன் பாய் நாளைக்கு பாக்கலாம்…

ஓகே சார்…

சரி தம்பி வண்டில ஏறுப்பா அடுத்த கஸ்டமர பாக்கலாம்..

“ம் ஏறிட்டேன் சார் போலாம்”, நான்.

தொடரும்…

போய் வரவா அம்மா??

அம்மா

கருவறைனு தான் நானும் நினைச்சேன்

கல்லறையாகும்னு தெரியலேயே அம்மா..

நீயோ உன் வலிய அழுது புலம்பி தீர்த்துட்ட..

நான் எப்படி சொல்றதும்மா என்னோட வலிய??

வயித்துல நான் உன்ன உதைச்சேனு மண்ணுல என்ன புதைச்சிட்டியாம்மா??

கைய புடிச்சு நடந்த அப்பா கூட கைய தூக்கிவிட வரலயேம்மா..

போய் வரவா தாயே??

இது போல யாரையும் அனுப்பிவிடாதே அம்மா…

விழிகளும் கன்னக் குழிகளும்

மொழிகள் இல்லா உறவாடல் விழிகளில் ஒரு கூடல்!!!

என் மதி இழந்து விழுந்தது உன் இரு விழிகளில்..‌

சிறு உயிரும் விழுந்து ஊசலாடுது உன் கன்ன குழிகளில்..

சில்லென்ற காற்று என் மேனி பட்டு செல்ல,

உன் சூடான மூச்சு காற்று என்னுள்ளம் வருடி செல்கின்றது

இடைவெளி இன்றி பயணிக்கின்றது இத்தருணம்.